உடல் சுகம் இல்லாத காரணத்தால், பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா நேற்றைய தினம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இன்றைய தினம் தனியார் மருத்துவமனை ஆன விக்டோரியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார் சசிகலா.
சசிகலாவின் உடல்நிலையில் பெரிய அளவில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை அதன் காரணமாக அவர் இன்றோ, அல்லது நாளையோ, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படலாம் என்று பெங்களூரு போரிங் மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் தெரிவித்ததை தொடர்ந்து, டிடிவி தினகரன் சசிகலாவை வேறு ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று டெல்லி வரை அழுத்தம் கொடுத்த காரணத்தினால், தற்சமயம் சசிகலா பெங்களூரு நகரில் இருக்கும் விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்.
அப்பொழுது சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே வெளிவந்த சசிகலாவை அங்கே கூடியிருந்த அவருடைய அபிமானிகள் உற்சாகமாக குரல் எடுத்து அவரை உற்சாகப்படுத்த திரும்பிப் பார்த்து விட்டு சிரித்து கையெடுத்து கும்பிட்டபடி கையசைத்து விட்டு சென்றிருக்கிறார் சசிகலா. சோர்வாக இருந்தாலும் கூட அவருக்காக வந்திருக்கும் தொண்டர்களை பார்த்ததும் சசிகலாவின் முகத்தில் திடீரென்று ஒரு புன்னகை தோன்றியதாக தெரிவிக்கிறார்கள்.
அதன்பிறகு பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றிய டிடிவி தினகரன், அவருக்கு ஸ்கேன் எடுப்பதற்காக விக்டோரியா மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டிருக்கிறார் . அங்கே அவருக்கான சோதனை முடிவை பொறுத்தே ஒரு சில நாட்கள் இருப்பார் .ஆனால் தற்சமயம் விக்டோரியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார் என்று தெரிவித்தார்.