வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, எதிர்வரும் 27ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலை ஆக இருக்கும் அவருக்கு திடீரென்று உடல்நிலை பாதிப்பு உண்டானது. இந்த நிலையில், அவருக்கு சிறையில் இருந்த நேரத்தில் திடீரென்று காய்ச்சலும், மூச்சுத் திணறலும், உண்டாகி இருக்கிறது அதன் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பெங்களூரு பவரிங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சசிகலா பின்னர் தினகரனின் முயற்சியால் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் இருக்கும் சசிகலாவிற்கு தீவிர பிரிவில் தொடர்ச்சியாக சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்தது.
பெங்களூரு போரிங் மருத்துவமனையில் சசிகலாவிற்கு செய்யப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லை என்று சொல்லப்பட்டது. ஆனால் தற்சமயம் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சசிகலாவுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது தினகரன் உட்பட அவரின் குடும்பத்தாருக்கும் மற்றும் அவருடைய அபிமானிகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சமீபத்தில் கிடைத்த தகவல்படி சசிகலா அவர்களுக்கு நிமோனியா காய்ச்சல் இருப்பதாக தெரியவந்திருக்கிறது. அதோடு நுரையீரல் தொற்று, ரத்த அழுத்தம், நீரிழிவு பிரச்சனை அதோடு தைராய்டு ,போன்ற பல பிரச்சனைகள் அவருடைய உடலில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதன் காரணமாக அவர் தொடர்ச்சியாக மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
இதன் காரணமாக தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.