அரசு தேர்வில் வெற்றி பெற முடியவில்லை என்றால் 10000 பணமா? இலவச பயிற்சி மையத்தின் அதிரடி அறிவிப்பு

0
221

அரசு தேர்வில் வெற்றி பெற முடியவில்லை என்றால் 10000 பணமா? இலவச பயிற்சி மையத்தின் அதிரடி அறிவிப்பு

தமிழக அரசு நடத்தும் அரசு பணியாளர் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை என்றால் 10,000 வழங்கபடும் என்று இலவச பயிற்சி மையம் ஒன்று தெரிவித்துள்ளது.

மேலும் இந்த பயிற்சி மையத்தில் இலவச நீட் தேர்வு பயிற்சியும் அளிக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்கள்.

ஆரஞ்சி அம்மாள் நல்வழி ( Goodway) இலவச பயிற்சி மையம் என்ற இந்த இலவச பயிற்சி மையமானது அரியலூர் மாவட்டத்தில் பரணம் எனும் கிராமத்தில் திரு.பழனிசாமி அவர்களின் சீரிய முயற்சியில் 2017 ல் தொடங்கப்பட்டு கடந்த இரு வருடமாக பல்வேறு துறையில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை கொண்டு அரசு பணியாளர் தேர்வுக்கு விடுமுறை நாட்களில் இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

மேலும் இந்த பயிற்சி மையத்தில் வெளி மாவட்ட மாணவர்கள் படித்து பயன்பெறும் வகையில் இலவச விடுதியும் வழங்கி வருகிறார்கள் என்பது மிகவும் சிறப்புகுரியது

இந்த மையத்தில் இருந்து கடந்த வருடம் நடந்த தமிழ்நாடு வனக்காவலர் பணிக்கு 3 பேர் தேர்வாகியுள்ளது என்பதும் கூடுதல் சிறப்பு

இந்த மையத்தில் தற்போது வரை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு மற்றும் காவலர் தேர்வுக்கு தான் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது இந்த பயிற்சி வகுப்பில் 90 க்கும் மேற்பட்ட மாணவ/மாணவியர்கள் படித்து வருகிறார்கள் குறிப்பாக
மதுரை,திருவண்ணாமலை, கடலூர் ,சிவகங்கை போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவிகள் வந்து தங்கி படித்து வருகிறார்கள்

கூடிய விரைவில் +2 படிக்கும் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றும் வண்ணம் திறமை மிக்க பல ஆசிரியர்கள் கொண்டு நீட் தேர்விற்கு இலவச பயிற்சிகள் நடத்தபட உள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

நீட் தேர்விற்கு இலவசமாக பயிற்சி மையம் அமைப்பது என்பது மிகவும் கடினமான செயல் என்பதை அனைவரும் அறிவோம் அவற்றையும் கடந்து இந்த மையம் நீட் தேர்விற்காக பயிற்சியை இலவசமாக நடத்த இருக்கிறது என்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது

இந்த வாய்ப்பை கிராமபுற ஏழை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் பயிற்சி மையத்தின் சார்பாக கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இப்பயிற்சி மையத்தில் சேர்ந்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை எனில் 10,000 வழங்கப்படும் என்று பயிற்சி மையத்தின் நிறுவுனர் அறிவித்துள்ளார்.

இக்காலத்தில் அரசு தேர்வுகளுக்கான பயிற்சிக்கு நிறைய தனியார் பயிற்சி நிறுவனங்கள் லட்சம் கணக்கில் பணம் வாங்கி கொண்டு நடத்தி வரும் நிலையில் இந்த பயிற்சி மையத்தில் சேர்ந்து வெற்றி பெற முடியவில்லை என்றால் 10000 வழங்கப்படும் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இம்மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற விரும்புபவர்கள் கீழுள்ள எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.
திரு.பழனிசாமி -7010021004

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

Previous articleவிவாகரத்தால் வந்த வினை ! வீடு புகுந்து மனைவியின் தலையை வெட்டி வலம் வந்த வாலிபர்!!
Next articleகசிந்தது காஷ்மீர் சீக்ரெட்! குறி வைத்து கூறுபோட்ட கூட்டாளிகள்!! கடுப்பில் எதிர்கட்சியினர்!!!