கொரோனா தடுப்பூசி போடுவதில் சாதனை படைத்த இந்தியா!

Photo of author

By Parthipan K

தற்போது கொரோனா நோய்த்தொற்றை எதிர்த்து தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை அனைத்து நாடுகளிலும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே.

தற்போது இந்தியாவிலும் கொரோனா தடுப்பு மருந்தை மக்களுக்கு செலுத்தி வருகின்றனர். இந்த கொரோனா தடுப்பு மருந்தை உபயோகிக்க ஆரம்பித்த முதல் 6 நாட்களில் மட்டும் 10 லட்சத்து 40 ஆயிரம் மக்களுக்கு இந்த கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதனால் இந்தியா தடுப்பூசி போடுவதில் அதிதீவிரமாக செயல்பட்டு கொண்டு வருகிறது. ஆனால் அமெரிக்காவில் 10 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி போட பத்து நாட்கள் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

உலக அளவில் கொரோனா தடுப்பூசி மொத்தம் 5 கோடியே 67 லட்சம் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இது ஜனவரி 21ஆம் தேதி வரையிலான நிலவரமாகும். மேலும் அமெரிக்கா ஒரு கோடியே 67 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை போட்டு முதலிடம் வகிக்கிறது. இந்தியா 10 லட்சத்து 40 ஆயிரம் தடுப்பூசிகளை போட்டு பத்தாம் இடத்தில் இருக்கிறது.