கோவாக்சின் தடுப்பூசி அடுத்து 7 மாநிலங்களுக்கு போடப்படும் – மத்திய நலவாழ்வு அமைச்சகம் தகவல்!

0
107

கொரோனா தடுப்பு மருந்துகளை இந்தியா ஜனவரி 16ஆம் தேதி முதல் சில மாநிலங்களில் தடுப்பூசி போடுகின்ற பணியை தொடங்கியுள்ளது. சனிக்கிழமை நிலவரப்படி 27 மாநிலங்களில் இந்த கொரோனா தடுப்பூசி மக்களுக்கு போடப்பட்டுள்ளது.

15 லட்சத்து 82 ஆயிரம் மக்களுக்கு இதுவரை கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது. தற்போது மத்திய நலவாழ்வு அமைச்சகம் அடுத்ததாக 7 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிகளை போடுவதற்கு திட்டமிட்டுள்ளது.

27 மாநிலங்களில் 12 மாநிலங்களுக்கு பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பு மருந்துகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. அடுத்ததாக கேரளம், மேற்குவங்கம், குஜராத், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய 7 மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பு மருந்துகளை பயன்படுத்த உள்ளதாக திட்டமிட்டுள்ளது மத்திய நலவாழ்வு அமைச்சகம்.

மேலும் இந்த ஏழு மாநிலங்களுக்கும் வரும் வாரத்தில் இருந்து பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பு மருந்துகளை போடும் பணிகள் தொடங்கும் என்றும் மத்திய நலவாழ்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Previous articleகுடியரசு தின சிறப்பு பேரணியில் நவீன ஆயுதங்கள் மக்கள் பார்வைக்கு அணிவகுக்க திட்டம்!
Next articleஇந்தியாவிற்கு பாராட்டு தெரிவித்த உலக சுகாதார துறை அமைப்பு!