பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் உடல் நிலையானது தொடர்ச்சியாக சீராக இருப்பதாக அந்த மருத்துவமனையின் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை வெளியிட்டிருக்கின்ற அறிவிப்பில் பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வரும் சசிகலா உடல் நிலையானது, தொடர்ச்சியாக சீராக இருப்பதாகவும், சசிகலாவின் ரத்தத்தில் இருக்கின்ற ஆக்சிஜனின் அளவு 98 சதவீதத்தில் இருந்து 97 சதவீதமாக குறைந்து இருப்பதாகவும், தெரிவிக்கப்படுகிறது. சசிகலா உணவு சாப்பிடுவதாகவும் உதவியுடன் நடைபயிற்சியை மேற்கொள்வதாகவும் அந்த மருத்துவமனையின் நிர்வாகம் விளக்கம் கொடுத்திருக்கிறது.
அதோடு, கொரோனாவிற்க்கான அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையிலும், அவருக்கு தொடர்ச்சியாக தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், ரத்தத்தின் சர்க்கரை அளவு 178 ஆக இருப்பதால் அவரை அந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் தொடர்ச்சியாக கண்காணிப்பு செய்து வருகிறார்கள். வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் கடந்த 4 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, தண்டனை காலம் முடிவடைந்து நாளையதினம் விடுதலை ஆக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.