மலச்சிக்கல் என்பது பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கி விடுகின்றது.அது பெரியோர்களை மட்டுமில்லாமல் குழந்தைகளுக்கும் அதிகமாக பாதிப்பை ஏற்படுத்துகின்றது. குழந்தைகள் எதை உண்கிறோம் என்பது தெரியாமல் சாப்பிட்டு விடுவதால் மலச்சிக்கல் ஏற்பட்டு விடுகின்றன. பெரியவர்களால் சமாளித்துக் கொள்ளும் தன்மை இருக்கும். ஆனால் குழந்தைகளால் அது என்னவென்று சொல்வதற்கே அவர்களுக்கு தெரியாது. அதனால் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் அதை உடனடியாக சரி செய்யக் கூடிய அற்புதமான வீட்டு வைத்தியத்தை பார்க்கப் போகிறோம்.
தேவையான பொருட்கள்:
1. காய்ந்த திராட்சை பழம்
2. பால் அல்லது தண்ணீர்.
செய்முறை:
1. முதலில் சிறிதளவு காய்ந்த திராட்சைப் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
2. இப்பொழுது அந்த காய்ந்த திராட்சையை பாலில் அல்லது தண்ணீரில் ஊறவைத்து விடுங்கள்.
3. அரை மணி நேரத்திற்குப் பிறகு பழத்தை பிழிந்து சாற்றை மட்டும் குடிக்க வேண்டும்.
4. இவ்வாறு குடித்தால் மலம் இலகுவாக போகும்.
இந்த எளிய முறையை வீட்டிலேயே குழந்தைகளுக்கு பயன்படுத்தி பயன்பெறுங்கள்.