மாணவர்களுக்கான இலவச இணையம்! இன்று முதல் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி!

Photo of author

By Sakthi

மாணவர்களுக்கான இலவச இணையம்! இன்று முதல் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி!

Sakthi

Updated on:

தமிழ்நாட்டில் கல்லூரியில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு தினந்தோறும் 2 ஜிபி இன்டர்நெட் வழங்குவதற்கான திட்டத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்றைய தினம் தொடங்கி வைக்க இருப்பதாக தெரிகிறது.

இணையதள வகுப்புகளின் மூலமாக கல்லூரி மாணவ, மாணவிகள், படிக்க உதவி செய்யும் விதமாக கல்லூரி மாணவர்களுக்கு இந்த இலவச இணையதள வசதி அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில், ஏப்ரல் மாதம் வரையில் தினம்தோறும் 2ஜிபி இணையம் இலவசமாக அளிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது. 9 லட்சத்து 69 ஆயிரத்து 47 மாணவர்களுக்கு ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டாவை இலவசமாக பெற்றிடும் வகையில், எல்காட் நிறுவனத்தின் மூலமாக விலையில்லாத டேட்டா கார்டு கொடுக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னரே அறிவிப்பு வெளியிட்டிருந்தார். மாணவர்களுக்கான 2ஜிபி இணையதளம் வழங்குவதற்கான சிம்கார்டுகள் எல்காட் நிறுவனத்தின் மூலமாக அதன் பெயரில் கொள்முதல் செய்யப்பட்டது

இந்த நிலையில், கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் தினந்தோறும் 2 ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்றைய தினம் தொடங்கி வைக்க இருக்கிறார்.