கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சசிகலாவை சந்திக்க வேண்டும் என்று தெரிவித்த கர்நாடக மாநில அதிமுக செயலாளரை சசிகலா சந்திக்க விரும்பவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது அதன் காரணமாக எல்லா அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் காரணத்தால் தமிழகத்தில் தேர்தல் களம் விறுவிறுப்படைந்து இருக்கிறது. தமிழகத்தில் இருந்து வரக்கூடிய எல்லா அரசியல் கட்சிகளும் தங்களுடைய எதிர்க்கட்சியினரை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள் .இதற்கிடையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த சசிகலா சென்ற ஜனவரி மாதம் 27 ஆம் தேதி சிறை தண்டனை முடிந்து விடுதலை ஆனார். ஆனால் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு அதன் காரணமாக பெங்களூரிலேயே விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அதற்குப் பிறகு சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் தென்பட்ட காரணத்தால், நேற்று முன்தினம் அவர் விக்டோரியா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். இந்தநிலையில் பெங்களூருவில் தங்கியிருக்கும் சசிகலாவை சந்திப்பதற்காக நேரம் கேட்ட கர்நாடக மாநில அதிமுக செயலாளர் யுவராஜ் அவர்களை சசிகலா சந்திக்க விரும்பவில்லை என்று தெரிவித்து விட்டதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. சசிகலா அவர்கள் கொரோனா காரணமாக தன்னை தனிமைப் படுத்தி கொண்டு இருக்கும் காரணத்தால், அவரை சந்திப்பதற்கான அனுமதி கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டாலும், சசிகலா அதிமுகவைச் சேர்ந்த ஒரு சில அமைச்சர்கள் மீதும் சட்டசபை உறுப்பினர்கள் மீதும் மிகுந்த வருத்தத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஆகவே அவர் வருத்தத்தில் இருக்கும் சட்டசபை உறுப்பினர்களும், அமைச்சர்களையும், தவிர்த்துவிட்டு மற்றவர்களை சசிகலா சந்திக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
சசிகலா அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகியை சந்திக்க விரும்பவில்லை என்று தவிர்த்தால் தமிழக அதிமுகவில் சற்று மகிழ்ச்சி தென்பட்டாலும், அவர் வருத்தத்தில் இருக்கக்கூடிய அதிமுக சட்ட சபை உறுப்பினர்களையும் அமைச்சர்களையும் தவிர்த்து மற்றவர்களை சந்திப்பதற்கு தயாராக இருக்கிறார் என்ற தகவல் அதிமுகவின் தலைமையை சற்றே அதிர வைத்திருப்பதாக சொல்கிறார்கள்.
ஆக சசிகலா தமிழகத்திற்கும் நுழைந்தாள் அதிமுக என்ற கட்சிக்குள் என்னதான் நடக்கும், எந்த விதமான மாற்றங்கள் நிகழும் என்பதை தமிழகம் முழுவதிலும் இருக்கின்ற மக்களும் சரி தமிழக அரசியல் கட்சிகளும் சரி கண்ணிமைக்காமல் உற்று நோக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இருந்தாலும் வரவிருக்கும் ஆபத்தை தவிர்க்கும் விதமாக பல சாமர்த்தியமான நடவடிக்கைகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கிறார்கள் அதிமுக வட்டாரங்களில்.