ஒரு நாளில் மட்டும் 6 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிப்பு!
கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்து வருவதால் நாடு முழுவதும் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.இந்நிலையில் தான் புதிய வகை கொரோனா வைரஸ் என்ற அடுத்த அச்சுறுத்தல் வந்தது.
குறிப்பாக கேரளா மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டேயிருப்பதால் பாதித்தவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்த நிலையில் தான் அம்மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டுமே 6,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை அங்கு கொரோனா தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கையானது 9,68,438 ஆக உயர்ந்துள்ளது.குறிப்பாக கொரோனா பாதிப்பால் இன்று ஒருநாளில் மட்டும் 19 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கையானது 3,867 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் கொரோனா பாதிப்புக்கு தற்போது வரை 65,517 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து இன்று வரை 5,948 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கையானது 8,96,668 ஆக உயர்ந்துள்ளது என்று கேரளா அரசு தெரிவித்துள்ளது.இதனையடுத்து 445 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
.