சொன்னதை செய்த ஈபிஎஸ்! வெறுப்பில் எதிர்க்கட்சித் தலைவர்!

0
109

தமிழக கூட்டுறவுத் துறை வங்கிகளில் விவசாயிகள் வாங்கியிருக்கும் விவசாய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விதி எண் 110ன் கீழ் சமீபத்தில் அறிவித்தார்.

16.4 3 இலட்சம் விவசாயிகள் தமிழக கூட்டுறவு வங்கிகளில் பெற்ற 12 ஆயிரத்து 110 கோடி விவசாயக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது முதல் அமைச்சரின் இந்த அறிவிப்பு காரணமாக விவசாயிகள் கொண்டாட்டத்தில் இருந்து வந்தார்கள் அதோடு முதல்வருக்கு அவர்கள் சார்பாக நன்றியும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் முதல்வர் அறிவித்தபடி ரூபாய் 12 ஆயிரத்து 110 கோடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது இந்த அறிவிப்பானது உடனே செயல் படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது அதற்கான பலன்களை நிச்சயமாக விவசாயிகளை சென்று சேரும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Previous articleஉயர்நீதிமன்ற தீர்ப்பு! பணியுமா அண்ணா பல்கலைக்கழகம்!
Next articleசொத்தால் வந்த வினை! அண்ணனுக்குஎமனான தம்பி!