சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே நூடுல்ஸ் உறைந்துள்ளது, அமெரிக்காவின் பனிப்பொழிவினால். அமெரிக்காவில் கடந்த வருடங்களையும் விட மிக அதிகமாக பனிப்பொழிவு பெய்து வருகிறது. அதிலும் மேற்கு பக்க திசை இடங்களில் இயல்பை காட்டிலும் அதிகமாக பனிப்பொழிவு ஏற்படுகிறது.
இதில் வியப்பில் ஆழ்த்த கூடிய ஒரு நிகழ்ச்சி டகோட்டா என்னுமிடத்தில் நிகழ்ந்துள்ளது. அந்த இடத்தில் ஓரிரு வாரங்களாகவே மைனஸ் 37 டிகிரி செல்சியஸ் என்ற வெப்பநிலை பதிவாகி உள்ளது. இதனையடுத்து வெளியே உணவருந்த சென்ற ஒரு பெண்ணிற்கு திகைத்திடும் அளவிற்கு ஒரு நிகழ்ச்சி நேர்ந்துள்ளது.
அவர் சாப்பிடுவதற்காக நூடுல்சை வெளியே எடுத்து அதனை வாயிற்க்கு அருகில் கொண்டு செல்வதற்குள் அந்த பனிப்பொழிவில் நூடுல்ஸ் உறைந்துள்ளது. உணவு உறைந்து போகும் அளவிற்கு குளிர் மற்றும் பனிப்பொழிவு பெய்து வருகிறது.
பொதுவாக குளிர்காலத்தில் சுடச்சுட சாப்பிட வேண்டும் என்று அனைவரும் ஆசைப்படுவார்கள். இந்தப் பெண் உறைந்த நூடுல்சை பார்த்து உறைந்துள்ளார். இந்நிகழ்ச்சி கேட்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.