ஆஸ்திரேலியாவில் அற்புத ஆரோரா வெளிச்சம் – பார்வையாளர்கள் பிரமித்தனர்!

0
72

ஆஸ்திரேலியா நாட்டில் நிகழ்ந்த ஓர் அற்புதமான நிகழ்வு. இந்த இயற்கை நிகழ்ச்சியைக் கண்ட அந்நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். நள்ளிரவு நேரத்தில் தோன்றிய ஒரு அற்புதமான வெளிச்சம் பார்ப்போரை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.

“அரோரா அல்லது துருவ ஒளி” என்றழைக்கப்படும், ஒரு ஒளி, பூமியின் வட மற்றும் தென் துருவ பகுதிகளில் நள்ளிரவு நேரத்தில் தோன்றும் ஒரு அற்புத மற்றும் அபூர்வ வெளிச்சமாகும். இந்த அபூர்வ வெளிச்சமானது தென்துருவத்தில் தோன்றினால் ‘அரோரா அஸ்ட்ராலிஸ்’ என்று அழைக்கப்படுகிறது.

அப்பகுதியிலுள்ள ஹோபர்ட் எனகின்ற நகரில் நள்ளிரவு நேரத்தில் தோன்றிய வெளிச்சம் (அரோரா அஸ்ட்ராலிஸ் ) பச்சை நிறத்துடன் கலந்த இளஞ் சிவப்பு நிறத்துடன், கண் கவரும் வகையில் தோன்றி காண்போரை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த ஒளி உலகம் தோன்றிய காலகட்டம் முதலே தோன்றுவதாக அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆர்டிக், அண்டார்டிக் போன்ற பகுதிகளில் எளிதில் காணக் கூடியதாகும். இது ஒரு வானுலக தோற்றப்பாடு (செலஸ்டியல் பினோமேனன்)௭னப்படும்.

author avatar
Parthipan K