சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டம் எல்லா ஆண்டுகளும் 16 நாட்கள் கோலாகலமாக தொடர்ந்து கொண்டாடப்படும். இந்த வருடம் பிப்ரவரி 11-ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி முடிகிறது. இந்த விழாவை சந்திர புத்தாண்டு என்றும் வசந்த விழா என்றும் கொண்டாடப்படுகிறது.
இவ்விழாவின் அலங்காரத்தை கண்கவரும் விளக்குகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் எருதை முக்கியமாகக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜியாங்கி என்னும் இடத்தில் ஜெக்ஸியன் ஊரில் செய்யப்பட்டிருந்த “ஒளிவிளக்குகள் அலங்காரம்” அனைத்தும், அனைவரின் ஈர்ப்பையும் ஈர்த்துள்ளது.
இந்தப் புத்தாண்டையொட்டி சீனாவில் உள்ள அனைத்து இடங்களும், கட்டிடங்கள், உண்ணும் உணவகங்கள், தங்கும் விடுதிகள்,அங்காடிகள், ஆலயங்கள்,சாலைகள் அலங்கரிக்கப்பட்டுள்ள விதம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
புத்தாண்டு என்றாலே பழைய துன்பங்கள் விலகி புதிதாக ஆண்டு தொடங்குகிறது என்பார்கள். இந்தப் புத்தாண்டை புன்னகையுடன் வரவேற்கும் சீன மக்களின் கொண்டாட்டம் அனைவரையும் கவர்ந்துள்ளது.