திமுக ஆட்சிக்கு வந்தால் குவார்ட்டர் இலவசம்! திமுக பொறுப்பாளர் தேர்தல் அறிவிப்பு

0
260

திமுக ஆட்சிக்கு வந்தால் குவார்ட்டர் இலவசம்! திமுக பொறுப்பாளர் தேர்தல் அறிவிப்பு

2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் மக்களின் ஓட்டுகளை கவர தேர்தல் அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கம்.ஆனால் திமுகவில் மிக முக்கிய பொறுப்பு வகிக்கும் ஒருவர் உதய சூரியன் மீண்டும் உதித்து வந்தால் அனைவருக்கும் குவார்ட்டர் இலவசம் என்று அறிவிப்பு வெளியிட்டது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுகவின் பிரச்சார மேடையில் பேசிய திமுக பொறுப்பாளர் ஈரோடு இறைவன் தற்போது பெட்ரோல் விலை ரூபாய் 100 தொட போகிறது இன்னும் சில நாட்களில் 200 யை தாண்டும் என்றும் இது கூட பரவாயில்லை ஒரு மதுவின் (குவார்ட்டர்) விலை 130 ஆக உள்ளது இது தான் மக்களுக்கு மிக வேதனையாக உள்ளது என்றும் பேசியிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் தற்பொழுது குவார்ட்டர் அடிக்கும் பிளாஸ்டிக் கிளாஸின் விலை ஏழு ரூபாய் என்றும், இதுவே திமுக ஆட்சியில் மூன்று ரூபாயாக இருந்தது எனவும் பேசியிருந்தார்.

குடிகாரர்கள் இந்த ஆட்சியில் ஒழுங்காக குடிக்கக்கூட முடியவில்லை,மது பிரியர்களின் வேதனையை உணர்ந்து திமுக கட்சியானது வரும் தேர்தலில் வெற்றி பெற்றால் அனைவருக்கும் குவாட்டர் இலவசம் இதுதான் என்னுடைய அறிவிப்பு என்று கூறியிருந்தார்.

அந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மது என்னும் அரக்கனால் இந்தியாவிலே அதிக சாலை விபத்து ஏற்படும் மாநிலமாக தமிழகம் உள்ளது. அதே போல் தமிழ்நாடு தான் அதிகமான விதவைகள் உள்ள மாநிலமாகும். மிக குறைந்த வயதில் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் மாநிலமாகவும் தமிழகம் இருந்து வருகிறது.

மேலும் மதுவினால் அரசுக்கு வருமானம் வந்தாலும் கூட, அதே மதுவினால் கற்பழிப்பு, கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.

எனவேதான் பாமக போன்ற அரசியல் கட்சிகளும், பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று நெடுங்காலமாக போராடி வருகிறார்கள். அதேபோல் 2016 தேர்தலில் அதிமுக மற்றும் திமுக அரசானது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுக்கடைகளை குறைப்போம் என்றும் உறுதி அளித்திருந்தன.

இந்த நிலையில் திமுகவில் பொறுப்பாளர் ஒருவர் இப்படி பொறுப்பில்லாமல் பேசி வருவது மக்களின் மீது அக்கறையின்மை தான் காட்டுகிறது என்று மக்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.(தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது)

 

 

 

 

 

Previous articleவிவசாயிகள் வெளியிட்ட பரபரப்பான அறிவிப்பு! உஷாரான மத்திய அரசு!
Next articleமுத்துராமலிங்க தேவர் ஒரு கொலைகாரன்! விசிக வன்னியரசு பேட்டி! பொதுமக்கள் கண்டனம்