விசிகவுக்கு எதிராக போராட்டம் செய்த முக்குலத்தோர் சமுதாய மக்கள்! மன்னிப்பு கேட்ட பொறுப்பாளர்

Photo of author

By Parthipan K

விசிகவுக்கு எதிராக போராட்டம் செய்த முக்குலத்தோர் சமுதாய மக்கள்! மன்னிப்பு கேட்ட பொறுப்பாளர்

முத்துராமலிங்க தேவர் குறித்து தவறாக பேசியதால் விசிக கட்சியின் முக்கிய பொறுப்பாளர் வன்னியரசு தேவர் சமுதாய மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருந்த விசிகவின் முக்கிய பொறுப்பாளர் வன்னியரசு இமானுவேல் சேகர் என்னும் சாதி ஒழிப்பு போராளியே முத்துராமலிங்க தேவர் தான் கொன்றார் எனவும், முத்துராமலிங்க தேவர் சாதியை ஊக்குவித்தவர் எனவும் பேசியிருந்தார் .

இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதால் தேவர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வன்னியரசுவை கைது செய்ய சொல்லி சாலை மறியல் போராட்டங்களை செய்தார்கள்.மேலும் அந்த சமுதாய மக்களுக்கு அதரவாக சமூக வலைதளங்களில் அனைத்து சமுதாய மக்களும் தனது கண்டனங்களை பதிவிட்டு வந்தார்கள்.

இதனால் விசிக வன்னியரசு அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார் அதில் அவர் கூறியுள்ளதாவது, யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது, மறைந்த தலைவர்களுக்கு தமிழர் என்னும் அடிப்படையில் நாம் தமிழர் கட்சி புகழ் வணக்கம் செலுத்தி வருவது தொடர்பான கேள்வியை எழுப்பினர்கள். அதற்கு பதில் அளிக்கும் போது, தியாகி இமானுவேல் சேகரன் அவர்களையும், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரையும்
சம அளவில் பார்க்கும் நாம்தமிழர் கட்சியின் சந்தர்ப்பவாத அரசியலை விமர்சித்தேன்.

விசிகவுக்கு எதிரான நாம் தமிழர் கட்சியின் வெறுப்பரசியலுக்கு பதிலளிக்கும் வகையில்தான் கருத்து சொன்னேன். மற்றபடி, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரைப் பற்றியோ, அவர்களால் பெரிதும் மதிக்கப்படும் தலைவரைப் பற்றியோ விமர்சிக்கும் நோக்கத்தில் நான் எதையும் பேசவில்லை. அதில் எந்த உள்நோக்கமும் இல்லை. ஆனால், அரசியல் காரணங்களுக்காக இது தவறாக திரிக்கப்படுகிறது எனவும், எனது கருத்து முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த மக்களின் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன் என கூறியிருந்தார்.

தொடர்ந்து இந்து மக்களையும் பிற சமுதாய தலைவர்களையும் இழிவாக பேசுவது தான் இவர்களின் பொதுவான வேலையாக இருந்து வருகிறது. மக்களிடையே தேவை இல்லாத பதட்டத்தை ஏற்படுத்தவும், சாதி மோதலை தூண்டி அதில் குளிர் காயத்தான் விசிக கட்சியினர்கள் இவ்வாறு பேசி வருவதாக பல்வேறு தரப்பு மக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.