விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக சார்பாக பிரம்மாண்ட மாநாடு! அதிர்ச்சியில் திமுக!

0
147

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் காரணத்தால், விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக சார்பாக எதிர்வரும் 28 ஆம் தேதி ஒரு பிரமாண்டமான மாநாடு நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மாநாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி ,பாரதிய ஜனதா, அதிமுக மற்றும் தேமுதிக போன்ற அதிமுகவின் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி பேச்சுவார்த்தைகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு விரைவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதோடு தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே அதிமுக கூட்டணி கட்சிகள் வேட்பாளர்களை அறிவிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மிகப்பிரம்மாண்டமான மாநாடு நடத்துவதற்கு திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இந்த மாநாட்டுக்கான பணிகள் அனைத்தையும் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் செய்து வருகின்றார். இந்த மாநாட்டில் ஏராளமான மக்களை திரட்டுவதற்கு அதிமுக வேலைகளை செய்து வருவதாக சொல்லப்படுகிறது. அதேபோல விழுப்புரம் மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியும் தனி செல்வாக்குடன் திகழ்கிறது. அதோடு மட்டுமல்லாமல் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் அவர்களும் விழுப்புரம் மாவட்டத்தில் தனி செல்வாக்குடன் இருந்து வருகின்றார். அதோடு அவர் சார்ந்த வன்னியர் சமூகமும் பெரும்பான்மை அளவில் இருந்து வருவதால் இந்த மாநாட்டில் மிகப்பெரிய எழுச்சியை காணலாம் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக எதிர்கட்சியான திமுக சற்றே கலங்கிப் போய் இருப்பதாக சொல்கிறார்கள்.

Previous articleஇந்த ராசிகாரர்களே அருகில் இருக்கும் நண்பர் கெட்டவர்களாக கூட இருக்கக்கூடும்! உஷார் மக்களே! இன்றைய ராசிபலன்
Next articleமனைவி வீட்டை விட்டு சென்றதால் ஆத்திரம்! பக்கத்து வீட்டுக்காரரை கொன்ற கணவன்!