அமைச்சர் செல்லூர் ராஜு அவர்களின் செயலிலும், பேச்சிலும், எப்போதுமே அதிரடியாக தான் இருந்திருக்கிறார். அவ்வாறு அவர் அதிரடியாக செய்யும் ஒவ்வொன்றும் பல நேரங்களில் சாட்சியாக வைத்திருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.
அந்த விதத்தில் திருவண்ணாமலையில் நடந்த ஒரு திருமண நிகழ்வில் பங்கேற்ற செல்லூர் ராஜு அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றிய அவர் முதல்வர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் செயல்பாடு நன்றாக இருப்பதாக கூறுவதற்கு பதிலாக முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் என்று தெரிவித்திருப்பது சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.
தொற்று காலத்திலும் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் எல்லா வகையிலும் சிறப்பாக செயலாற்றினார் என்று தெரிவித்து விட்டு அதன் பிறகு சுதாரித்துக் கொண்ட செல்லூர் ராஜு எடப்பாடி பழனிச்சாமி என்று தெரிவித்திருக்கிறார்.
எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் இபிஎஸ் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று முதலில் தெரிவித்தவர் செல்லூர்ராஜு தான். ஆனால் தற்சமயம் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் என்று அவர் தெரிவித்திருப்பது அந்த கட்சியினரிடையே கடுமையான விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது. அதேபோல முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் அதிர்ச்சியடைந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.