அடேங்கப்பா இந்த டீ க்கு இவ்வளவு டிமேண்டா! அலைமோதும் மக்கள் கூட்டம்!
கொல்கத்தாவில் உள்ள ஒரு பகுதியில் 100 க்கும் மேற்பட்ட டீ வகைகள் ஒரே இடத்தில் கிடைப்பதால் இந்த டீ கடைக்கு அதிக அளவு கூட்டம் வந்துள்ளது.இதில் 12 ரூபாய் தேநீர் முதல் 1000 ரூபாய் வரை தேநீர் விற்கப்படுகிறது.கொல்கத்தாவில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த நிர்ஜாஷ் என்பவர் தனது வேலையை விட்டுவிட்டு அவரது பெயரான நிர்ஜாஷ் என்ற டீ கடையை நடத்தி வருகிறார்.
இதில் ஒரு கப் டீ யின் விலை 1000 ரூபாயாக விற்கிறார்.ஆனால் கடையென்று எதுவும் கிடையாது. கடையின் மேல் கூரையாக குடையை பயன்படுத்துகிறார்.வருபவர்கள் உட்காருவதற்கு பிளாஸ்டிக் நாற்காலிகளை பயன்படுத்துகிறார்.ஏன் இதன் டீ விலை உயர்ந்து காணப்படுகிறது என்றால் அதற்கு காரணம் அவர் போடும் டீ தூளின் விலையே ஆகும்.
ஸ்பெஷல் டீ ஆக போலே டீ போட்டு தருகிறார்.இந்த டீ தூளின் விலை ரூபாய் 30000 லட்சமாகும்.ஆகையால் இந்த டீ யின் விலை 1000ரூபாயாக உள்ளது.டீ யின் விலை 1000 ரூபாயாக இருந்தாலும் அதன் சுவைக்காக மக்கள் குடித்து மகிழ்கின்றனர்.
மேலும் சில்வர் நீடில் வைட் டீ,ஹைபிஸ்கஸ் டீ,லேவேண்டர் டீ,துளசி இஞ்சி டீ,ப்ளூ தேசன் டீ,ரூபயாஸ் டீ,ஒகாய்டி டீ என அனைத்து வகையான வெளிநாட்டு தேநீர்களும் இங்கு கிடைக்கிறது.இவற்றின் டீ தூளும் ரூபாய் 10000 ஆயிரம் முதல் 35000ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் தங்களது ஊரில் கிடைக்கும் டீ இங்கே கிடைப்பது நினைத்து மகிழ்ந்து குடித்து வருகின்றனர்.இப்படி தனியார் துறையில் இருப்பவர்கள் எல்லாம் டீ கடை போட்டுவிட்டால் அந்த தனியார் கம்பெனிகளின் நிலைமை அதோகதியாக மாறிவிடும்.