சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் வேட்பாளர்களின் நேர்காணல் ஆரம்பித்து நடைபெற்று வருகின்றது. இந்த நேர்காணலில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எல்லோரும் ஒன்றாக சேர்ந்து தேர்தலில் பணி செய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.
சட்டசபைத் தேர்தலில் அதிமுகவின் சார்பாக போட்டியிட விருப்பம் இருக்கிறவர்கள் விருப்ப மனுவை பெற்றுக் கொள்ளலாம் என்று அந்த கட்சியின் தலைமை அறிவித்தது. அதன்படி விருப்ப மனுக்களும் விநியோகம் செய்யப்பட்டன. அதன்படி முதல்வர் மற்றும் துணை முதல்வர் முன்னிலையில் விருப்ப மனுக்களை கொடுத்தவர்களுக்கு நேர்காணல் நடைபெற்று வருகின்றது.
எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விருப்ப மனு கொடுத்த 8640 நபர்களுக்கும் இன்று ஒரே தினத்தில் நேர்காணல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நேர்காணலில் உரையாற்றிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வெற்றி பெறுவது மட்டுமே நம்முடைய இலக்கு அதனை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம்.
இதனை அடுத்து உரையாற்றிய அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழகத்தின் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் தலைமை அறிவிக்கும் வேட்பாளரை எல்லோரும் ஒன்றிணைந்து, ஆதரவு கொடுத்து முழுமனதுடன் வெற்றிபெற வைக்க வேண்டும் எல்லோரும் ஒன்றாக இணைந்து தேர்தலில் பணியாற்ற வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.