வனப்பகுதியில் வாழும் விலங்குகள் அங்குள்ள சூழலுக்கேற்றவாறு, வனத்தில் கிடைக்கும் உணவுகள் மற்றும் வேட்டை ஆடுவதன் மூலம் உணவு பெறுதல், அங்குள்ள நீர் நிலைகளில் தாகம் தணித்து கொள்ளுதல் என வாழ்க்கை முறையை வாழ்ந்து வருகின்றன.
வன பகுதியில் வாழும் சிறுத்தை ஒன்று இரவு நேரத்தில், நல்ல இடி இடித்து கொண்டிருக்கும் சமயத்தில், தாகத்தைத் தணிப்பதற்காக ஒரு குட்டையில் தண்ணீர் அருந்திக் கொண்டிருந்தது. பின்புறம் ஒரு விலங்கு வருவதையும் தீண்டுவதையும் உணர்ந்த அடுத்த நொடி ஒருவித ‘பதட்டத்துடன் துள்ளிக்குதித்து அலறி ஓடியது’.
‘லைஃப் அண்ட் நேச்சர்’ என்ற ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் கவனித்துப் பார்த்தால், பின்புறம் வந்து தீண்டிய ஒரு விலங்கு மற்றுமொரு சிறுத்தை ஆகும். “அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்” என்பதைப்போல பலத்த இடி சத்தத்திற்கு முன்பு பயந்து இருந்துள்ளது.
சிறுத்தை வேறு ஒரு சிறுத்தை தீண்டியதற்காக பயந்து தெறித்து ஓடியது மட்டுமல்லாமல், சிறுத்தை ஓடியதை கண்ட தீண்டிய சிறுத்தையும் அலறியடித்து பின்புறம் ஓடியுள்ளது. இந்த வீடியோவை பார்ப்பவர்கள் அனைவரும் சிறுத்தையின் செயலைக் கண்டு சிரித்து வருகிறார்கள்.