வாயு தொல்லைக்கு நிரந்தர தீர்வு! இதை செய்தால் போதும்!

Photo of author

By Rupa

வாயு தொல்லைக்கு நிரந்தர தீர்வு! இதை செய்தால் போதும்!

வீட்டிலிருக்கும் பொருட்களை கொண்டுதான் அந்த காலத்தில் அனைத்து வைத்தியங்களும் செய்யப்பட்டன.ஆனால் இன்றைக்கோ சிறிது காயத்திற்கு குட மருத்துவரை நாடி சென்றுவிடுகிறோம்.நாம் பார்க்க போவது அந்த கால வீட்டு முறைதான்.

தேவையான பொருட்கள்:

தண்ணீர்,சீரகம்,ஓமம் மற்றும் பெருங்காயம் தேவையான அளவு உப்பு.

செய்முறை:

முதலில்  ஒரு டம்ளார் தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பின் மேல் வைக்க வேண்டும்.அந்த தண்ணீர் கொதிக்க ஆரமிக்கும் நிலையில் ஒரு ஸ்பூன் சீரகம்,ஓமம்,சிறிதளவு பெருங்காயம் மற்றும் தேவைக்கேற்ப உப்பு இவற்றை சேர்த்து மூன்று நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு இதை வடிகட்டி ஒரு டம்ளரில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.சாப்பிட்ட பத்து நிமிடம் பிறகு இதை அருந்துங்கள்.உங்களுக்கு நல்ல நிவாரணம் கிடக்கும்.வயறு உப்பசம்,அஜீரண கோளாறு மற்றும் வாயு ஆகிய அனைத்தும் அகன்று விடும்.

இவையில்லாமல் வேறொரு பொருட்களையும் பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:

இஞ்சி,தண்ணீர்,பெருங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் எடுத்துகொள்ள வேண்டும்.அதன்பிறகு அதில் சிறிய துண்டு இஞ்சி,சிறிதளவு பெருங்காயம் மற்றும் தேவைக்கேற்ப உப்பு போட வேண்டும்.பிறகு நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.அதன்பின் ஒரு டம்ளாரை எடுத்து அதில் வடி கட்டி குடித்து வர வேண்டும்.இவ்வாறு செய்யும் போது வாயு தொல்லை முற்றிலும் அகன்று விடும்.

வாயு தொல்லை இருபவர்கள் அதிக அளவு காரம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.அதிக அளவில் ஜங் புட் உணவுகளை எடுத்து கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.