ரேஷன் கார்டு இருப்பவர்களுக்கு வீடு தேடி வரும் அதிர்ஷ்டம்!
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.இதனையடுத்து தமிழக கட்சிகள் அனைத்தும் இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளன.தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக எதிரெதிராக போட்டியிடுகின்றன.அதிமுக தரப்பில் பாமக,பாஜக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியை உறுதி செய்துள்ளன.அதிமுக மற்றும் தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது.அதேபோல திமுக தரப்பில் காங்கிரஸ்,கம்யூனிஸ்ட்,விசிக மற்றும் மதிமுக கட்சிகளுடனான கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தேர்தலிலும் வழக்கம் போல இயக்குனர் சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சியும்,அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற டிடிவி தினகரனின் அமமுக கட்சியும் தனித்து போட்டியிடுவதாக கூறி வருகின்றன.அதே நேரத்தில் நடிகர் கமல்ஹாசன் ஆரம்பித்துள்ள மக்கள் நீதி மைய்யம்,நடிகர் சரத்குமார் அவர்களின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் ஆளும் கட்சியான அதிமுகவும்,எதிர்க்கட்சியான திமுகவும் போட்டி போட்டுக்கொண்டு மக்களுக்கு சலுகைகளை வாக்குறுதிகளாக வழங்கி வருகின்றன.குறிப்பாக கடந்த காலங்களை போல இந்த தேர்தலிலும் மக்களிடம் வாக்குகளை பெற பண பட்டுவாடா செய்ய இரு தரப்பும் தயராக இருப்பதாகவே தெரிகிறது.இந்நிலையும் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் விநியோகத்தை தடுக்கும் விதமாக தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது.
இதனையடுத்து ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் எந்தவித ஆதாரமும் இல்லாமல் பணமோ அல்லது பரிசு பொருட்களோ எடுத்து சென்றால் அதை பறிமுதல் செய்ய தேர்தல் ஆணையம் பறக்கும் படையை தயார் செய்துள்ளது.இவ்வளவு கண்காணிப்பு இருந்தாலும் அதிகாரிகள் கண்ணில் மண்ணை தூவி விட்டு அரசியல்வாதிகள் தங்களின் வழக்கமான வேலைகளை செய்ய தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.
அந்த வகையில் பணம் பட்டுவாடா செய்ய மதுரை அதிமுகவினர் புதிய யுக்தியை கையாளவுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.அதாவது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளுக்காக பொது மக்களுக்கு டிபன் பாக்ஸ் பரிசாக வழங்க திட்டமிட்டுள்ளதாகவும்,அதற்காக அவர்களிடமிருந்து ரேசன் கார்டுகளை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.இந்த ரேஷன் கார்டில் உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கையை வைத்து எவ்வளவு வாக்குகள் உள்ளன என கணக்கிடுகின்றனர். பின்னர் அதற்கேற்றவாறு பணம் விநியோகம் செய்ய டிபன் பாக்ஸ் மூலமாக டோக்கன் வழங்கபடுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
எதோ எப்படியோ மதுரை பகுதியில் ரேசன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் அதிர்ஷடம் வீடு தேடி வரவுள்ளது.