மகளிர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

0
118

மகளிர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

சர்வதேச மகளிர் தினமானது மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பெண்கள் கடந்த காலத்தில் வீட்டின் வேலைகளை செய்துக்கொண்டு வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அதன் பின் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் நிலைக்கு சிறிதாக முன்னோக்கி சென்று ஆண்களுக்கு நிகராக பெண்களும் தொழிற்சாலைகளில் வேலை செய்ய முடியும் என நிருபித்தார்கள்.

அதனையடுத்து 1907 ஆம் ஆண்டு சம ஊதியம் மற்றும் சம உரிமை கேட்டு போராடத் தொடங்கினர்.1910 ஆம் ஆண்டு டென்மார்க் நாட்டில் பெண்கள் உரிமை மாநாடு நடந்தது.இந்த போராட்டத்தில் பல நாடுகளிலிருந்து பெண்கள் கலந்துக்கொண்டு போராடினர்.இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஜெர்மனி கம்யூனிஸ்ட் தலைவர் கிளாரி மார்ச் 8 ஆம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தினார்.

இதையடுத்து மார்ச் 8 ஆம் தேதி முதல் 1921 ஆம் ஆண்டு முதல் மகளிர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.1975ஆம் ஆண்டு முதல் ஐ.நா சர்வதேச மகளிர் தினமாக மாற்றியது.தற்போது ரஷ்யா,உக்ரைன்,ஆப்கானிஸ்தான்,வியட்நாம் போன்ற வெளிநாடுகளில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விடுப்பு அளிக்கப்படுகிறது.

இதனை கருதி தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்,செயலாளருக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியது,பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண் ஊழியர்கள் அனைவருக்கும் விடுமுறை அளிக்குமாறு கூறியுள்ளார்.பெண்கள் ஆண்களுக்கு இணையாக அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகின்றனர்.மகளிருக்கு இன்னும் வாய்ப்புகள் வழங்கினால் பல சாதனைகளை படைப்பார்கள் என தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் கூறியுள்ளார்.

Previous articleசொந்த மாவட்டத்திலேயே துணை முதல்வரின் செல்வாக்கை சரிக்க திமுக சதித்திட்டம்! என்ன செய்யப் போகிறார் ஓபிஎஸ்!
Next articleபாண்டியன் ஸ்டோர் பிரபலத்திற்கு டிடி கொடுத்த நச் முத்தம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!