முதல்வர் கேட்ட ஒற்றை கேள்வியால் மனம் நொந்த எதிர்க்கட்சித் தலைவர்!

0
157

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்தே அவருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கும் பல்வேறு இடங்களில், பல்வேறு விஷயங்களில், நேருக்கு நேர் விவாதங்கள் வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும் இது வரையில் முதல்வரும் சரி, எதிர்கட்சி தலைவரும் சரி, நேருக்கு நேர் விவாதம் செய்ததே கிடையாது.

ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை பல்வேறு இடங்களில், பல்வேறு விஷயங்களில், நேரடி விவாதத்திற்கு அழைத்திருக்கிறார். ஆனால் அந்த சமயத்தில் எல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஏதாவது ஒரு காரணத்தை கூறி அந்த விவாதத்தை தவிர்த்து வந்துவிடுவார்.ஏனென்றால் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு கையில் துண்டு சீட்டு இல்லாமல் பேசவே தெரியாது என்ற ஒரு விமர்சனம் அரசியல் கட்சியிலும் சரி, சமூக வலைத்தளங்களிலும் சரி எப்பொழுதுமே ஒரு விமர்சனம்இருந்த வண்ணமே உள்ளது.

அந்தவகையில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கையில் எந்த ஒரு சீட்டையும் வைத்துக்கொள்ளாமல் சுமார் 2,3 மணி நேரம் வரையில் உரையாற்றுவார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கையில் தான் எழுதிக் கொண்டு வந்த குறிப்பு சீட்டு இருந்தாலும்கூட அதனை பார்த்து சரியாக படிக்க முடியாமல் அனேக மேடைகளில் திண்டாடி இருக்கிறார்.

சமீபத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஆட்சியில் மக்களுக்கு கொண்டு வந்த நலத்திட்டங்கள் மற்றும் திமுக ஆட்சியில் கொண்டுவந்த நலத் திட்டங்கள் தொடர்பாக விவாதம் செய்வதற்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் அவரோ நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது என்று தெரிவித்து அதனை மறுத்து விட்டார்.இதனை கிண்டலடித்து உரையாற்றிய முதலமைச்சர் மீண்டும் மீண்டும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை விவாதத்திற்கு அழைத்த வண்ணம் இருந்தார்.

இது ஒருபுறமிருக்க எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்களை துண்டு சீட்டு என்று பட்டை பெயர் வைத்து கூப்பிடும் அளவிற்கு அவர் பிரபலமாகிவிட்டார். ஏனென்றால் சமூக வலைதளத்திற்கு நுழைந்தால் அதில் இருக்கும் மீம்ஸ் அனைத்திலும் இவர் தான் டாப்பாக இருப்பார்.அந்த அளவிற்கு இவருடைய புகழ் சமூக வலைத்தளத்தில் பரவி இருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள்.அதன் காரணமாக,தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துண்டு சீட்டு இல்லாமல் விவாதத்திற்கு வர தயாரா என்று அழைப்பு விடுத்தார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் இன்றைய தினம் இந்தியா டுடே என்ற ஆங்கில நாளிதழின் சார்பாக நடைபெற்ற கருத்தரங்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார் அந்த சமயத்தில் ஸ்டாலினை துண்டு சீட்டு எதுவும் எடுக்காமல் விவாதத்திற்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார். ஏற்கனவே துண்டு சீட்டு ஸ்டாலின் என்று சமூக வலைதளங்களில் தயாரிக்கப்பட்டு வரும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மிகுந்த வருத்தத்தில் இருந்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது. இதெல்லாம் போதாதென்று தற்சமயம் முதல்வரே இவ்வாறு அழைப்பு விடுத்திருப்பது எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை மேலும் வேதனை அடைய செய்திருப்பதாக சொல்கிறார்கள்.