தமிழகத்தின் முக்கிய தொகுதியில் காலத்திற்குப்பின் நேருக்கு நேர் சந்திக்கும் அதிமுக-திமுக! வெற்றி யாருக்கு!

0
160

திண்டுக்கல் தொகுதியை பொறுத்தவரையில் தமிழகத்தில் ஒரு மிக முக்கிய தொகுதியாக பார்க்கப்படுகிறது திண்டுக்கல்லில் அதிமுகவைப் பொறுத்தவரையில் திண்டுக்கல் சீனிவாசன் தனி செல்வாக்குடன் திகழ்ந்து வருகின்றார். அதேபோல திமுகவைப் பொறுத்தவரையில் அந்த கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பெரியசாமி பெரும் செல்வாக்குடன் இருந்து வருகின்றார். இந்த இரண்டு கட்சிகளுமே இந்த திண்டுக்கல் மாவட்டத்தில் மாறி மாறி வெற்றி பெற்று ஒன்றுக்கொன்று செல்வாக்கு குறைந்தது இல்லை என்பதை நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.அப்படி இருக்கையில், திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் சட்டசபைத் தொகுதியில் பல்வேறு தேர்தலில் அதிமுகவும் திமுகவும் மாறி மாறி வெற்றி பெற்று இருக்கிறது. ஆகவே திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த வேடசந்தூர் சட்டசபைத் தொகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அதிமுக திமுக என்ற இரு கட்சிகளையும் பொருத்தவரையில் இரு கட்சிகளுமே தமிழகத்தில் மாபெரும் சக்தி படைத்தவை என்றுதான் சொல்ல வேண்டும் அப்படியிருக்கும்போது தேர்தலில் அந்தக் கட்சிகள் நேருக்கு நேர் சந்திக்கும் போது வெற்றி பெறுவது மிக மிக கடினமாக தான் இருக்கும் அப்படியே வெற்றி பெற்றாலும் அந்த வெற்றி நூலிழை அளவில் தான் இருக்கும் அந்த அளவிற்கு இரு கட்சிகளுமே தமிழகத்தில் பலம் வாய்ந்த கட்சிகளாக இருந்துவருகின்றன.

இதற்கு முன் எத்தனையோ தேர்தலில் எப்படி அந்த இரு கட்சிகளுமே நேருக்கு நேர் போட்டியிட்டு கடைசி வரையில் வெற்றி பெறுவோமா? அல்லது வெற்றி பெற மாட்டோமா? என்று டென்ஷனில் இருந்து கடைசியில் தான் எந்த கட்சியாக இருந்தாலும் வெற்றி பெற்றிருக்கிறது.இந்த டென்சனை குறைப்பதற்கு தான் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் இருக்கக்கூடிய நிறைய தொகுதிகளில் அதிமுக திமுகவை நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்த்து வந்தது. அதற்கு காரணம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புத்திசாலிதானம் தான் என்று சொன்னால் அது மிகையாகாது.

அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுமே சமமான வாக்கு வங்கிகள் கொண்ட ஒரு கட்சியாக தமிழகத்திலேயே விளங்கி வருகிறது. அதன் காரணமாக கடந்த 2016ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் அனேக தொகுதிகளில் அதிமுக அவர்களை சந்தித்தது அந்த விதத்தில் நிறைய இடங்களில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் நேருக்கு நேர் சந்திக்காமல் போய்விட்டது.அப்படி நேருக்குநேர் சந்திக்காமல் அந்த தேர்தலில் இரு கட்சிகளுமே களம் கொண்டதால்தான் அதிமுகவும் சரி திமுகவும் சரி குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றது.

அதிமுகவைப் பொறுத்தவரையில் 139 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்தது. இந்த நிலையில், கடந்த 2011ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் பொழுது 25 தொகுதிகளை கூட வெற்றி பெறாமல் இருந்த திமுக இந்த தேர்தலில் சுமார் 86 இடங்களில் தனித்து வெற்றி பெற்றிருந்தது.இந்த சூழ்நிலையில், எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டசபைத் தொகுதியில் சுமார் 20 வருடங்களுக்கு பின்னர் அதிமுக மற்றும் திமுக என்ற இரு பெரும் கட்சிகளும் நேருக்கு நேர் மோத இருக்கிறார்கள். ஆகவே சுமார் 20 வருடங்களுக்கு பிறகு நேருக்கு நேர் சந்திக்கும் சமபலம் வாய்ந்த இரு கட்சிகளில் எந்த கட்சி வெற்றி பெறும் என்று தமிழகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.

Previous articleதிண்டுக்கல்லில் மோதிக்கொள்ளும் அதிமுகவின் இரு முக்கிய புள்ளிகள்! யாருக்கு சீட்!
Next articleதினகரன் அணிக்கு போன புதிய கூட்டணி! கட்சி கொண்டாட்டத்தில் டிடிவி தினகரன்!