மீண்டும் பாமகவில் இணைந்தார் வன்னியர் சங்க மாநில செயலாளர் -எதிர்கட்சிகளை கதிகலங்க வைக்கும் பாமக.

0
387

மீண்டும் பாமகவில் இணைந்தார் வன்னியர் சங்க மாநில செயலாளர் -எதிர்கட்சிகளை கதிகலங்க வைக்கும் பாமக.

அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளில் போட்டியிடும் பாமக தனது வேட்பாளர் பட்டியலை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது.
அதில் முதல் 10 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை மார்ச் 10-ஆம் தேதி வெளியிட்டது.

1. 58. பென்னாகரம் திரு. ஜி.கே.மணி, அவர்கள்
சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்
தலைவர், பாட்டாளி மக்கள் கட்சி

2. 129. ஆத்தூர் (திண்டுக்கல்) திருமதி. ம. திலகபாமா, பி.காம்,  அவர்கள்,
பொருளாளர், பா.ம.க

3. 64. கீழ்ப்பென்னாத்தூர் திரு. மீ.கா. செல்வக்குமார் எம்.ஏ, அவர்கள்,
மாநில அமைப்பு செயலாளர்.

4. 33. திருப்போரூர் திரு. திருக்கச்சூர் கி. ஆறுமுகம்  பி. எஸ்.சி, அவர்கள்,
சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் மாநில துணைப் பொதுச்செயலாளர்.

5. 150. ஜெயங்கொண்டம் வழக்கறிஞர். கே. பாலு, பி.காம், பி.எல் அவர்கள்
வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவைத் தலைவர்

6. 42. ஆற்காடு திரு. கே.எல். இளவழகன் டி.எம்.இ அவர்கள்,
சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர், மாநில துணைப் பொதுச்செயலாளர்,

7. 50. திருப்பத்தூர் திரு. டி.கே. ராஜா அவர்கள்,
சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்
மாநில துணைப் பொதுச்செயலாளர்,

8. 59. தருமபுரி திரு. எஸ்.பி.வெங்கடேஸ்வரன் பி.எஸ்.சி அவர்கள்,
மாநில துணைப் பொதுச்செயலாளர்,

9. 88. சேலம் மேற்கு திரு. இரா. அருள் பி.எஸ்.சி அவர்கள்,
மாநில  துணைப் பொதுச்செயலாளர்,

10. 70. செஞ்சி திரு. எம்.பி.எஸ். இராஜேந்திரன், அவர்கள்,
மாநில துணை அமைப்புச் செயலாளர்

இதில் குறிப்பாக ஜெயங்கொண்டம் தொகுதியில் பாமகவின் செய்தித் தொடர்பாளர் மற்றும் பாமகவின் வழக்கறிஞர் ஆன பாலு அவர்களை வேட்பாளராக அறிவித்தார்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வன்னியர் சங்க மாநில‌ செயலாளர் வைத்தி பாமகவை விட்டு வெளியேற போவதாக அறிவித்தார். மேலும் பாமகவில் உழைப்பவர்களுக்கு இடமில்லை நடிப்பவர்களுக்கே இடம் என்று தன்னை ஜெயங்கொண்டம் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்காத விரக்தியில் பத்திரியாளர்களை சந்தித்து பேட்டி அளித்து விலகினார்.

இதனால் பாமகவினருக்கு இடையே கொஞ்சம் சலசலப்பு ஏற்பட்டது. அந்த தொகுதியில் கள அரசியல் செய்து வந்த வைத்தி விலகினால் பாமகவின் ஓட்டு பிரியும் என்பதை அறிந்த பாமக தலைமை ,வைத்தி அவர்களிடம் பேசி மீண்டும் பாமகவில் இணையும் படி கோரிக்கை வைத்துள்ளார்கள் இதை ஏற்று மீண்டும் பாமகவில் இணைந்தார் வைத்தி.

மேலும் ஜெயங்கொண்டம் தொகுதி பாமக வேட்பாளர் திரு பாலு அவர்களை சந்தித்து அவருக்கு மரியாதை செலுத்தினார் மற்றும் அய்யா அவர்களின்
40 ஆண்டு கால இட ஒதுக்கீடு கனவு நிறைவேறியுள்ள இந்த தருணத்தில்,
அதற்கு நன்றிக்கடனாக நாம் அனைவரும் சமூக உணர்வுடன்
நமது கட்சி வேட்பாளர்கள் மற்றும் நமது கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அனைவரது வெற்றிக்காகவும் அயராது உழைப்போம் எனவும் பேசி பாலு அவர்களுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.புயல் வேகத்தில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.தேர்தல் பிரச்சாரம் செய்யும் முன்பு மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு பின்பு பிரச்சாரத்தை தொடங்கினார் வழக்கறிஞர் பாலு அவர்கள்.

இந்த தொகுதி பாமகவின் கோட்டையாகவே இருந்து வருகிறது.
1996 ஆம் ஆண்டு 2006 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு அவர்கள் போட்டியிட்டு தோல்வி அடைந்தாலும் இரண்டாவது இடத்தை பெற்றார்.அதே போல் 2011 ஆம் ஆண்டு பாமக இந்த தொகுதியில் 92,739 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்து ஜெ.குரு அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.

மிகவும் வலுவான இந்த தொகுதியில் பாமக வெல்வது கிட்டத்தட்ட உறுதி என்கிறார்கள் அரசியல் ஆலோசகர்கள்.

 

 

 

Previous articleதினகரன் அணிக்கு போன புதிய கூட்டணி! கட்சி கொண்டாட்டத்தில் டிடிவி தினகரன்!
Next article‘அம்மா அரசுன்னா சும்மா இல்ல’… இலவச வாஷிங் மெஷின், சோலார் அடுப்பு என பெண்களை கவர இத்தனை அறிவிப்புகளா??