மிஸ்டர் கிங் மேக்கர் மொத்த சேலம் மாவட்டத்தையும் தன் கைக்குள் அடக்க முதல்வர் அதிரடி திட்டம்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

0
121

வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தமிழ் நாட்டிற்கான சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை தங்களை முழுமையாக ஈடுபடுத்தி வருகிறார்கள்.அந்த வகையில், இன்றைய தினம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்கிறார். சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அவர் இன்றையதினம் தன்னுடைய வேட்புமனுத் தாக்கலை செய்கின்றார்.

அதோடு மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தையும் அவர் மேற்கொள்ள வருகின்றார் என்று சொல்லப்படுகிறது. அதேபோல வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளில் தன்னுடைய வேட்புமனுத்தாக்கல் முடித்துக்கொண்ட துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதால் இன்று என்னுடைய வேட்புமனுத்தாக்கல் முடித்துக் கொண்டேன் என்று தெரிவித்திருக்கிறார். அந்த வகையில், முதல்வரும் துணை முதல்வரும் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

இதனால் தமிழகம் முழுவதிலும் ஆளுங்கட்சியான அதிமுகவினர் மிகப்பெரிய மகிழ்ச்சியிலும் கொண்டாட்டத்தில் இருந்து வருகிறார்கள். அந்த வகையில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருவதாக சொல்லப்படுகிறது.தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கடந்த 12 ஆம் தேதி தன்னுடைய வேட்புமனு தாக்கல் செய்து இருக்கின்றார். அப்போது அவர் தெரிவித்ததாவது மூன்றாவது முறையாக போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகின்றேன் நிச்சயமாக பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று தெரிவித்திருக்கிறார்.

அதுபோல தன்னுடைய சொந்த ஊரான எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி களமிறங்கியிருக்கிறார். அந்த தொகுதியில் அவருக்கு மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அவர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த சமயத்திலேயே சேலம் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 8 தொகுதிகளை வெற்றி பெற்று கொடுத்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் நற்பெயர் வாங்கி இருக்கின்றார்.அவ்வாறு இருக்கையில், தற்சமயம் அவர் முதலமைச்சராக இருப்பதால் அவருடைய அதிகாரமும் அரசியல் பலமும் மற்றும் மக்கள் செல்வாக்கும் அந்த தொகுதியில் மட்டுமல்லாமல் அந்த மாவட்டத்திலேயே உயர்ந்து இருப்பதாக சொல்கிறார்கள்.

ஆகவே சேலம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய சட்டசபை தொகுதிகள் அனைத்தையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கைப்பற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கிறார்கள். சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவு காரணமாக பல தொகுதிகளில் தன்வசம் வைத்திருக்கிறது. தற்சமயம் முதல்வராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய சொந்த மாவட்டமான சேலத்தில் முழுமையாக தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கிறார்கள்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாட்டையும், அவருடைய வேகத்தையும் கண்ட திமுக தலைமை தற்சமயம் நிலைகுலைந்து போய் இருப்பதாக சொல்கிறார்கள். அதோடுமட்டுமல்லாமல் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் வாரிசுகளும் திமுக மீது நம்பிக்கை இழந்து இருப்பதாக சொல்கிறார்கள். அதன் காரணமாக, அந்த பகுதியில் வன்னியர்களின் வாக்குகளும் திமுகவுக்கு எதிராக திரும்பி இருப்பதாக சொல்கிறார்கள்.

ஆகவே திமுகவிற்கு எதிராக திரும்பியிருக்கும் வன்னியர்களின் வாக்குகளை முழுமையாக பெறுவதற்கான முயற்சியிலும் எடப்பாடிபழனிசாமி ஈடுபட்டு வருவதாக சொல்கிறார்கள். அதன் நீழ்ச்சிதான் வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு என்று சொல்கிறார்கள். பாட்டாளி மக்கள் கட்சி தான் இந்த வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு கோரிக்கையை அரசிடம் முன்வைத்து இருந்தது என்று சொன்னாலும் அந்த கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றி இருந்தாலும் அதிலும் தனக்கான லாபத்தை மனதில் வைத்துதான் தமிழக அரசு செயல்பட்டு இருக்கிறது என்று சொல்கிறார்கள்.

சேலம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய வன்னியர்களின் வாக்குகளை பெறுவதற்காக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என்று தெரிவிக்கிறார்கள். இதன் காரணமாக, திமுக தலைமை என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போய் நிற்பதாக தெரிவிக்கிறார்கள்.

Previous articleமதுரையை ‘கலகலக்க’வைத்த பாஜக தொண்டர்களின் காமெடி… வேட்பாளர் லிஸ்ட்டிலேயே இல்லாதவருக்கு பட்டாசு வெடித்து ஆதரவு…!
Next articleகொரோனாவின் தாக்கம் அதிகரிப்பு! திடீர் லாக்டவுன்!