தமிழ்நாட்டின் அப்பா திமுக ஸ்டாலின் தான்! அதிமுகவின் அம்மா என்ற பட்டத்தை பிடுங்கிய திமுக!தங்க தமிழ்செல்வனின் சர்ச்சைக்குரிய பேச்சு!
இந்த தேர்தலானது மற்ற தேர்தல்களை விட அதிக அளவு பரபரப்பை கொண்டுள்ளது.ஏனென்றால் இரு மூத்த தலைவர்களும் இறந்த பின் அவர்களின் கட்சின் சார்பில் ஒருவர் முதலமைச்சராகவும் மற்றறொரு பக்கம் குடம்பத்தின் வாரிசாகவும் போட்டியிடுகின்றனர்.இருவரிடமும் கடும் போட்டி நிலவி வருகிறது ஏனென்றால் ஒரு பக்கத்தினர் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கின்றனர்.மற்றொரு பக்கம் இத்தனை வருடம் ஆட்சியை பிடிக்க முடியவில்லை இப்போதாவது ஆட்சியை பிடித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம்.ஆகையால் வரும் ஏப்ரல் மாதம் நடக்கும் சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டையே திருப்பி போடும் என்ற நிலையில் உள்ளது.
இந்நிலையில் மக்களுக்கு பலவித சலுகைகளை மாற்றி மாற்றி இரு அரசும் கூறி வருகிறது.அதனைத்தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிக்கு ரூ.1000 ம் அதே அதிமுக ஆட்சிக்கு வந்தால் ரூ.1500 என்றும் அறிவித்துள்ளனர்.இதில் பலர் அதிமுக எழுதிய இந்த அறிவிப்பு எப்படியோ லீக் ஆகி திமுகவிற்கு தெரிந்துவிட்டது அதனால் தான் அவர்கள் முந்திவிட்டு அறிவித்துவிட்டனர் என்று பல பிரச்சாரங்களில் அதிமுக கூறிவருகிறது.இதற்கு பதிலடி கொடுக்குமாறு தேனீ மாவட்டம் போடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஓ.பன்னீர் செல்வத்தை எதிர்த்து திமுக சார்பில் தங்க தமிழ்செல்வன் போட்டியிடுகிறார்.
அவர் அங்கு பிரச்சாரத்தில் ஈடுபடும்போது கூறியது,அவர்கள் எழுதி வைத்திருந்தது லீக் ஆகவில்லை அவ்வாறு ஆகியிருந்தால் நாங்கள் 1000 ரூபாயிக்கு பதிலாக 2000 ஆயிரம் ரூபாய் என்று தானே அருவித்திருப்போம்.அதனால் இது எதுவும் லீக் லாம் ஆகவில்லை.இந்த திட்டமானது எங்கள் தலைவரின் சிந்தனையில் உதித்த மிகப்பெரிய யோசனை.மக்கள் கொரோனா கால கட்டத்திலிருந்தே பொருளாதார வீழ்ச்சி அடைந்துள்ளனர்.அதனால் அவர் மக்களின் நிலைமையை புரித்துக்கொண்டு அப்பா ஸ்தானத்தில் இருந்து தான் குடும்ப தலைவிகளுக்கு இந்த திட்டத்தை அறிவித்தார்.இவர் இவ்வாறு கூறியது அதிமுக வை அனைவரும் அம்மா ஆட்சி என்று கூறுகின்றனர்.அதே போல் திமுக ஆட்சியையும் அப்பா ஆட்சி என்று அழைக்க வேண்டும் என்பது போல் இருந்தது.
அதுமட்டுமின்றி திமுக அதிமுக வின் அம்மா என்ற பட்டத்தை பிடுங்க நினைக்கிறது என பலர் பேசி வருகின்றனர் .எங்கள் எல்லா அறிக்கைகளையும் விட இது தான் ஹைலைட் என்று கூறினார்.அதுமட்டுமின்றி நாங்கள் சிலிண்டர் விலையை குறைக்கும் படி பல போராட்டங்களை நடத்திவிட்டோம் ஆனால் அவர்கள் சிறிதளவும் கூட குறைக்கவில்லை இவர்கள் எப்படி வருடத்திற்கு ஆறு சிலிண்டர்களை இலவசமாக தர போகிறார்கள் என மக்களின் முன் கேள்வி எழுப்பினார்.இந்த சட்டமன்ற தேர்தல் பல மாற்றங்களை கொண்டுவரும் என அனைவரு பேசி வருகின்றனர்.