ஒட்டுமொத்த தமிழகத்தையும் கைக்குள் அடக்கிய முதல்வர்! ஸ்டாலின் கதறல்!

0
98

அதிமுக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது விருந்து மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதோடு தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து தரப்பு மக்களிடமும் நம்பிக்கையைக் கொடுத்து வருகின்றார். அதேபோல அந்தந்த மாவட்டத்தில் நடைபெற்று இருக்கும் வளர்ச்சித் திட்டப் பணிகள் போன்றவற்றை ஆய்வு செய்தும் புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்தும் வருகின்றார்.

முதல்வரின் இதுபோன்ற சுற்றுப் பயணத்தால் தமிழகம் முழுவதிலும் அவருக்கு மிகப்பெரிய ஆதரவு உருவானது. அதோடு டெல்டா மற்றும் அதனை சுற்றி இருக்கின்ற பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்டத்தை நிறைவேற்றி அதன் மூலமாக டெல்டா பகுதியில் இருக்கக்கூடிய விவசாயிகளின் ஒட்டுமொத்த ஆதரவும் அதிமுகவிற்கு தான் என்கின்ற அளவில் இருந்து வருகிறது.

இப்படி தமிழகம் முழுவதிலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவிற்கு ஆதரவு பெருகி வருவதால் இதனை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்கட்சியான திமுக அந்த கட்சிக்கு தேர்தல் வியூக பணிகளை செய்துவரும் பிரசாந்த் கிஷோரை வைத்து தமிழகம் முழுவதும் அதிமுகவிற்கு எதிரான ஒரு சில ரகசிய வேலைகளை செய்து தமிழகத்தில் அதிமுகவிற்கு எதிரான அலை இருப்பதை போல ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.

அதோடு வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு கோரிக்கையானது மிக நீண்டகாலமாக பல அரசாங்கத்திடமும் வலியுறுத்தப்பட்ட ஒன்று. அப்படி அந்த சமூகத்தின் மிக நீண்ட கால கோரிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றி இருப்பது தமிழகம் முழுவதிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. அதன் காரணமாக வன்னியர் சமூக மக்களையும் அவர்களுடைய வாக்குகளையும் முதல்வர் கவர்ந்திருக்கிறார் என்பது மிகையாகாது.

இந்த சூழ்நிலையில், இன்றைய தினம் அதிமுகவின் தலைமை கழகம் வெளியிட்டிருக்கின்ற ஒரு அறிவிப்பில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளரை எதிர்த்து சுயேட்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்ததோடு கழகத்தின் கொள்கை குழுக்களுக்கும் மற்றும் கோட்பாடுகளுக்கும் இடையூறாக வகையில் செயல்பட்ட காரணத்தாலும் கழகத்தின் கண்ணியத்திற்கும் மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட காரணத்தாலும், அதோடு அதிமுகவின் வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு அவரி தோற்கடிப்பேன் என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருக்கின்ற காரணத்தாலும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திரு சந்திரசேகரன் சட்டசபை உறுப்பினர் அவர்கள் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட எல்லா பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார். கழகத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் இவருடன் எந்தவிதமான தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.