பரிதாபமாக உயிரிழந்த ரேணிகுண்டா நடிகர்…! அதிர்ச்சியில் திரைத்துறையினர்

0
135

ரேணிகுண்டா படத்தில் நடித்த நகைச்சுவை நடிகர் தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

2009ம் ஆண்டு வெளிவந்த ரேணி குண்டா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் கார்த்திக் எனும் தீப்பட்டி கணேசன். ரேணிகுண்டாவில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய தீப்பட்டி கணேசன், அஜித் நடித்த பில்லா-2, தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட படங்களில் நடித்தார். எல்லாரையும் போல் கொரோனா ஊராடங்கால் வேலைவாய்ப்பின்றி பாதிக்கப்பட்ட தீப்பட்டி கணேசன், மதுரையில் உள்ள கடை ஒன்றில் பரோட்டா மாஸ்டராக பணியாற்றி வந்தார். திரைத்துறைக்கு வருவதற்கு முன்னதாகவே சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தீப்பட்டி கணேசன் பரோட்டா மாஸ்டராக பணியாற்றிய அனுபவம் இருந்துள்ளது.


கொரோனா லாக்டவுன் நேரத்தில் பொருளாதார சிக்கலில் தவித்த ரேணிகுண்டா நடிகருக்கு, உடல்நலக்குறைவும் ஏற்பட்டு அவரை மேலும் வாட்டியது. படப்பிடிப்பின் போது, வெறும்காலில் நடந்ததில் முள் ஒன்று காலில் குத்தியதில் அது செப்டிக் ஆகி காலே செயலிழக்கும் நிலை ஏற்பட்டது. தீப்பட்டி கணேசனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரு மகன்கள் இருக்கும் நிலையில் குழந்தைகளுக்கு பால் வாங்க கூட பணம் இல்லை என்றும், நடிகர் அஜித்திடம் உதவி எதிர்பார்ப்பதாகவும், அவரை பார்க்க பல முறை முயன்றும் அது முடியாமல் போனது என உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதையடுத்து, நடிகரும் பாடலாசிரியருமான சினேகன், நடிகர் விஷால் உள்ளிட்டோர் உதவிகளை செய்து வந்தனர். இந்த நிலையில் சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்த தீப்பட்டி கணேசனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அது பலனளிக்காமல் உயிரிழந்தார். தீப்பெட்டி கணேசனின் உடல் ஜெய்ஹிந்த் புரத்திலுள்ள வீட்டில் அவரின் வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது.

கொரோனா காலத்தில் திரைத்துறையின் சிறிய கலைஞர்கள் தங்களையும் குடும்பத்தையும் வறுமையில் இருந்து மீட்க முடியாமல் போராடி வரும்சூழலில் வறுமை பிடியில் சிக்கிய தீப்பெட்டி கணேசன் உயிரிழந்தது ஏழை கலைஞர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

Previous articleபிரதமரை எச்சரித்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்! கடும் கோபத்தில் பாஜகவினர்!
Next articleகோவில்பட்டியில் பரபரப்பு! அமைச்சர் கடம்பூர் ராஜு மீது நடைபெற்ற கொலை முயற்சி தொண்டர்கள் கொதிப்பு!