கோவில்பட்டியில் பரபரப்பு! அமைச்சர் கடம்பூர் ராஜு மீது நடைபெற்ற கொலை முயற்சி தொண்டர்கள் கொதிப்பு!

0
99

சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே தமிழகம் பரபரப்பாக காணப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் எல்லோரும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.அதோடு அவர் அவர்களும் தங்களுடைய எதிர்க்கட்சிகளை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.அந்த விதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எதை செய்தாலும் அதில் ஏதேனும் ஒரு குறை சொல்வதையே ஸ்டாலின் வழக்கமாக கொண்டிருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் கரூர் தொகுதியில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களின் உதவியாளர் மீது திமுகவினரால் தாக்குதல் நடத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.இதுகுறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தன்னுடைய கடுமையான கண்டனத்தை தெரிவித்து இருக்கின்றார்.அதோடு தன்னுடைய உதவியாளரை மருத்துவமனையில் போய் நலம் விசாரித்து விட்டு வந்திருக்கிறார்.அதோடு இதுபோன்ற திமுகவினரின் அராஜகங்களுக்கு நிரந்தர முடிவு கட்டுவதற்காக தமிழக மக்கள் தயாராகி வருகிறார்கள் என்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.

அதோடு ஒரு வேளை கரூர் மாவட்டத்தில் எதிர்க்கட்சியான திமுக வெற்றி பெறவில்லை என்றால் நாங்கள் நிச்சயமாக தேர்தலை அந்த மாவட்டத்திலேயே நிறுத்தி வைப்போம் அதன்பிறகு நாங்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின்னர் அங்கே நாங்கள் இறங்கி வேலை பார்த்து வெற்றி பெற்று விடுவோம் என்ற கருத்தையும் எதிர்க்கட்சியான திமுக தெரிவித்ததாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.அதேபோல கோவில்பட்டி தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அந்த தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக டிடிவி தினகரன் களம் காண இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், கோவில்பட்டி தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், டிடிவி தினகரன் தரப்பினர் தோல்வி பயம் காரணமாக, தன்னை கொலை செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள் என்ற பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார் அமைச்சர் கடம்பூர் ராஜு.


அவர் தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் நேற்று இரவு நானும் டிடிவி தினகரன் தரப்பினரும் ஒரே பகுதியில் பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்ட சமயத்தில் காவல்துறையினர் கேட்டுக் கொண்டதன் பெயரில் நான் என்னுடைய பிரச்சாரத்தை நிறுத்திக்கொண்டேன். என்னுடன் வந்த வாகனங்களையும் வர வேண்டாம் என்று தெரிவித்துவிட்டு நான் தனியாக காரில் சென்று கொண்டிருந்தேன் என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர் கடம்பூர் ராஜு.

நாங்கள் தனியாக சென்று கொண்டிருந்த சமயத்தில் என்னுடைய காரை டிடிவி தினகரன் தரப்பினர் வழி மறித்தார்கள் இருந்தாலும் அதனை தாண்டி நாங்கள் வந்துவிட்டோம் எனவே அங்கு தயாராக வைக்கப்பட்டிருந்த வெடியை டிடிவி தினகரன் தரப்பினர் என்னுடைய கார் மீது வீசி எறிந்தார்கள் இதன் காரணமாக, என்னுடைய கார் தீப்பற்றும் நிலைக்கு வந்தது. ஆனாலும் என்னுடைய கார் ஓட்டுநர் மற்றும் என் மீதும் தீப்பொறி விழுந்து உடம்பில் காயங்கள் உண்டானது.

இருந்தாலும் அந்த சமயத்தில் நாங்கள் மிகப் பொறுமையாக வந்தோம் ஆகவே அந்தக் கட்சியை சார்ந்த நபர்களின் அராஜக செயல்கள் மக்களுக்கு தெரியும் என்னுடைய கார் ஓட்டுனர் கொஞ்சம் சுதாரிப்பாக காரை செலுத்தாமல் இருந்திருந்தால் என்னுடைய கார் தீப்பற்றி எரிந்து என்னுடைய உயிருக்கும் ஆபத்து ஏற்படும் சூழல் உருவாவதற்கான வாய்ப்பு இருந்தது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்திருக்கிறார்.

நான் இதைப் போன்று பல சம்பவங்களை பார்த்து இருக்கிறேன். அதனால் இதற்கெல்லாம் நான் பயப்பட போவதில்லை என்னுடைய தேர்தல் வேலைகளை தடுத்து நிறுத்துவதற்காக தான் இந்த கொலை முயற்சி செய்யப்பட்டு இருக்கிறது. ஏனென்றால் என்னுடைய வெற்றி இந்த தொகுதியில் உறுதியாகிவிட்டது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்திருக்கிறார்.