அடடே! முதல்வர் மீது அவர் மனைவிக்கு என்ன ஒரு கரிசனம்!

0
132

எதிர் வரும் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று எப்படியாவது மீண்டும் ஆட்சியை தக்க வைத்து விட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிச்சாமி மிக தீவிரமாக இருந்து வருகிறார். அதற்காக அவர் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே கூட்டணி தொகுதி ஒதுக்கீடு போன்ற பேச்சுக்கள் எழுவதற்கு முன்பிருந்தே அவர் தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தொடங்கிவிட்டார். அந்த அளவிற்கு எதிர்வரும் தேர்தலை மனதில் வைத்து அவர் களப்பணியாற்ற தொடங்கிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.அவர் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட சமயத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மேடைப்பேச்சு என்றாலே கூச்ச சுபாவம் தொற்றிக்கொள்ளும் என்று சொல்கிறார்கள்.

அப்படி இருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தற்சமயம் மேடைக்கு மேடை வெளுத்து வாங்குகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.அதிலும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சாரத்தின் போது அவர் இதுவரையில் எந்த ஒரு முதல்வரும் செய்து கொள்ளாத வசதியாக காலர் மைக் வசதியை செய்து கொண்டார். அது பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களிடமிருந்து கேட்டுப் பெற்ற ஒரு அறிவுரையாகவே பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக எங்கே மாநாடு போட்டாலும் சரி அந்த மேடைகளில் அந்த கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கையில் எந்த ஒரு மைக்கையும் வைத்துக்கொள்ளாமல் மேடையில் அங்குமிங்கும் நடந்தபடி தான் உரையாடி கொண்டிருப்பார். அவர் மைக்கில் பேசுகிறாரா அல்லது சாதாரணமாகவே அவர் குரல் இவ்வாறு ஒலிக்கிறதா என்ற சந்தேகமும் கூட அங்கே கூடியிருந்த பொதுமக்களிடம் தோன்றியிருக்கிறது.

காரணம் அவர் இந்த காலர் மைக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வந்தார். ஆனால் இதனை தமிழக மக்கள் அறிந்து கொள்வதற்கு சிறிது காலம் பிடித்தது. தற்போது பாட்டாளி மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் இருக்கிறது என்பது பலரும் அறிந்ததே. ஆகவே அவரிடம் ஆலோசனை பெற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர் பிரச்சாரத்தின்போதும், மாநாடுகளின் போதும் உபயோகப்படுத்திய அந்த காலர் மைக் தொழில்நுட்பத்தை முதல்வரும் தற்போது பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் தமிழகம் முழுவதிலும் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் எங்கெங்கே பிரச்சாரம் மேற்கொள்கிறாரோ அந்த பகுதிகளில் எல்லாம் கடந்த பத்தாண்டு காலத்தில் தமிழக அரசின் சாதனையையும் அதேபோல எதிர்கட்சியான திமுக செய்த இடையூறுகள் போன்ற விமர்சனங்களையும் பொதுமக்களிடையே வைப்பதற்கு முதல்வர் தயங்குவது இல்லை என்று சொல்லப்படுகிறது.

அதேபோல தேர்தல் தொடங்கியதிலிருந்து தமிழகம் முழுவதிலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அவர் செல்லும் இடங்களில் எல்லாம் ஒரு சிறப்பு கவனிப்பு இருக்கிறதாம். தற்போது கொரோனா அச்சுறுத்தல் அதிகம் இருப்பதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் மனைவியே அவருக்காக ஒரு கசாயத்தை தயார் செய்து அவர் தமிழகத்தில் எங்கே சென்று பிரச்சாரம் மேற்கொண்டாலும் அங்கே அனுப்பி விடுவாராம் பேச்சுக்கு இடையே அவருக்கு அந்த கசாயம் கொடுக்கப்படுவதாக சொல்கிறார்கள்.

தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு அதன் காரணமாக முதலமைச்சருக்கு அடிக்கடி தொண்டை கம்மி போவது வாடிக்கையாகிவிட்டது. ஆகவே ஒரு சில மூலிகைகளையும் சேர்த்து கசாயம் வைத்து குடித்து வருகிறாராம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அவர் பதவி ஏற்றுக்கொண்ட சமயத்தில் அவரிடம் இருந்த தயக்கம் தற்போது இல்லை என்பதே திமுகவினரை அதிர்ச்சியடைய வைத்திருப்பதாக சொல்கிறார்கள்.

Previous articleஎங்க முதல்வர் அவர் தான்! தமிழக மக்கள் கைகாட்டுவது யாரை தெரியுமா? ஷாக்கிங் சர்வே ரிப்போர்ட்!
Next articleஸ்டாலினின் முதல்வர் கனவிற்கு ஆப்பு வைத்த அழகிரி! அதிர்ச்சியில் திமுகவினர்!