விடாது தொரத்தும் கொரோனா! ஒரே நாளில் 251 பேர் உயிரிழப்பு!

0
105
Render Corona! 251 deaths in one day!
Render Corona! 251 deaths in one day!

விடாது தொரத்தும் கொரோனா! ஒரே நாளில் 251 பேர் உயிரிழப்பு!

கொரோனா தொற்றானது போன ஆண்டு சீனாவில் தொடரப்பட்டு படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் சென்றது. இந்த கொரோனா தொற்றால் லட்சக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.மக்களின் நலன் கருதி அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது.மக்கள் வேலைவாய்ப்புகள்  இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அதனைத்தொடர்ந்து இந்தியாவிலும் மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இந்த ஊரடங்கானது ஏழு மாதங்களாக தொடர்ந்தது.

நவம்பர் மாதம் முதல் ஊரடங்கு சில தளர்வுகளுடன் முடிவுக்கு வந்தது.அதன்பின் மக்கள் கொரோனா தொற்றை மறந்து தனது பழைய வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிட்டனர்.மீண்டும் முதலில் ஆரம்பித்து போலவே ஐரோப்பியாவில் கொரோனா 2 வது அலை உருவாக ஆரம்பித்துவிட்டது.அதனைத்தொடர்ந்து சென்ற வருடம் நடந்தது போலவே வெளிநாடுகளில் அதாவது (ஜெர்மனி,பிரான்ஸ்) போன்ற நாடுகளில் ஊரடங்கானது  அமல்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்ததாக நமது இந்தியாவிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனக் கூறி வரும் நிலையில் தினசரி உயிரிழந்தோர் எண்ணிக்கையானது அதிகரித்துக் கொண்டே  செல்கிறது.தற்போதைய கணக்கின்படி மட்டும் 1.60 லட்சமாக  உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை தாண்டியுள்ளது.இன்று காலை 8  மணியுடன் முடிந்த கணக்கெடுப்பில் புதிதாக கொரொனோ தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையாக 53,476 பேர் உள்ளனர்.

புதிதாக உயிரிழந்தோரின் எண்ணிக்கையாக 251 பேராக உள்ளனர்.நாட்டில் மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கையாக 1,60,692 ஆகா உள்ளது.தொற்றிலிருந்து ஒரே நாளில் குணமானவர்களின் எண்ணிக்கை 26,490 ஆகா உள்ளது.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3,95,192ஆகா உள்ளது.குணமடைந்தோர் எண்ணிக்கை விகிதம் 92.28% ஆகா உள்ளது.அதே உயிரிழந்தோர் விகிதம் 1.35% ஆகா குறைந்துள்ளது.

இவ்வாறு குறைந்து கொண்டே வந்தால் மக்கள் தயக்கமின்றி தினசரி வாழ்க்கையை நடத்தலாம்.மக்கள் அனைவரும் அரசு கூறும் விதிமுறைகளை கடைப்பிடித்து வரவேண்டும்.

Previous articleகலையிழந்த தேர்தல் களம்! சோகத்தில் மக்கள் காரணம் என்ன தெரியுமா?
Next articleBreaking திமுகவின் கஜானாவிலேயே கையை வைத்த வருமான வரித்துறை! முக்கிய புள்ளி வீட்டில் ரெய்டு! அதிர்ச்சியில் ஸ்டாலின்!