திடீரென்று முதல்வர் பக்கம் சாயிந்த ஸ்டாலின்! அதிர்ச்சியில் தொண்டர்கள்!
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்நிலையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சியினர் தன்னுடன் கூட்டணி கட்சிகளை சேர்த்துக்கொண்டு திவீர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.சில தனியார் ஊடகங்களின் கருத்துக்கணிப்பால் இரு கட்சிகளும் பீதி அடைந்துள்ளது.அதனால்,தற்போது பல இடங்களில் ஓட்டுக்காக பணம் பட்டுவாடா செய்து வருகின்றனர்.இதைத்தடுக்கும் விதத்தில் தேர்தல் ஆணையம் பல பறக்கும் படையினரை பல குழுக்களாக நியமித்துள்ளது.
அவ்வாறு நியமித்தும் அவர்கள் கண்ணுக்கு விபூதி பூசிவிட்டு சில இடங்களில் பணம் பட்டுவாடா நடந்து வருவது சகஜமாகிவிட்டது.அதில் பணம் பட்டுவாடா செய்து மாட்டிக்கொள்வோம் எனக் நினைத்து பல அரசியல் கட்சிகள் புது புது யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அது என்னவென்றால் மக்களை கவர்வதற்காக சினிமா பட நடிகர்,நடிகைளை அரசியலில் இறக்கி உள்ளனர்.அவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபடுவதால் தேர்தல் களமானது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் ஆரமிக்க இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் ஆங்காங்கே பிரச்சாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் காங்கேயத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.அப்போது அவர் பேசியது,திமுகவை அளிப்பவர்கள் அழிந்தது போவார்களே தவிர திமுகவை அழிக்க முடியாது.அண்ணா காலம் முதலே திமுக-வை அழிக்க போகிறோம் என பலர் கூறி வருகின்றனர்.திமுகவை வீழ்த்த உயிரைக் கொடுக்கத் தயார் என தேர்தலுக்கு முன்பே எடப்பாடி பழனிசாமி அவரது தோல்வியை ஒப்புக்கொண்டார்.திமுகவை வீழ்த்த நீங்கள் உயிரை தர வேண்டாம்.நீங்கள் நீண்ட நாட்கள் வாழ்ந்து திமுக ஆட்சியை பார்க்க வேண்டும் என்று கிண்டல், கேளி செய்து பேசினார்.