பரபரப்பான அரசியல் சூழலில் திடீர் யாகம் நடத்திய சசிகலா- முக்காடு போட்டு பிரார்த்தனை

0
76

ராகு சன்னதியில் நாக தோஷம் நீங்க ஹோமம் வளர்த்து பூஜை செய்த சசிகலா தமிழக மக்கள் நலமுடன் வாழவும் நாகூர் தர்காவில் வழிபட்டதாக கூறினார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா, ஜனவரி மாத இறுதியில் தண்டனைக்காலம் முடிந்து வெளியே வந்தார். தமிழகம் வரும் வழியில் பேசிய சசிகலா, தான் அரசியலில் பங்கேற்க உள்ளதாகவும் விரைவில் மக்களை சந்திப்பேன் எனவும் சூளுரைத்தார். இதனால் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் தமிழக அரசிய களத்தில் பெரும் மாற்றம் ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் சில நாட்களிலேயே தான் அரசியலில் இருந்து முழுவதிலுமாக விடுபடுவதாக அந்தர் பல்டி அடித்த சசிகலா தனது ஆதரவாளர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்தார்.

எனினும், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி, தேமுதிகவுன் கூட்டணி வைத்து களமிறங்குகிறது. இந்த நிலையில் அவ்வபோது வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் சசிகலா சில சிறப்பு பூஜைகளையும், வேண்டுதல்களையும் நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில், நாகை மாவட்டத்திற்கு சென்ற சசிகலா நாகூரில் உள்ள நாகநாத சுவாமி ஆலையத்தில் நாக தோஷம் நீங்க ஹோமம் வளர்த்து பூஜை செய்தார். நாகநாத சுவாமிக்கும், நாகவல்லிக்கும் அர்ச்சனை செய்து வழிபட்டார்.

பூஜை முடிந்து வெளியே வந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, வேண்டுதலை நிறைவேற்றவும், தமிழக மக்கள் நலமுடன் வாழவும் பூஜை செய்ததாக கூறினார். அப்பொழுது தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எந்தவித பதிலும் அளிக்காமல் தனது காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

நாகநாத சுவாமி கோவிலில் வழிபாட்டை முடித்துக்கொண்டு நாகூர் தர்காவிற்கு சென்ற சசிகலா, சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றார். தர்கா சார்பில் பச்சை சால்வை அணிவிக்க அதனை தலையில் போட்டுக் கொண்ட சசிகலா, இஸ்லாமியர்களை போன்று வழிபாடு நடத்தினார்.

author avatar
CineDesk