கொரோனா பரவலுக்கு அரசியல்வாதிகள் தான் காரணம்! சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

0
114
Politicians are responsible for the spread of the corona! Sudden announcement by the Minister of Health!
Politicians are responsible for the spread of the corona! Sudden announcement by the Minister of Health!

கொரோனா பரவலுக்கு அரசியல்வாதிகள் தான் காரணம்! சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை விடாமல் தொரத்திக்கொண்டு தான் உள்ளது.சென்ற வருடம் மக்கள் 7 மாதங்களுக்கு மேல் ஊரடங்கு என்னும் பேரில் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அப்போது நாட்டின் பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சியடைந்திருந்தது.அதனையடுத்து மக்கள் ஆகஸ்ட் மாதத்திலிருந்து சில தளர்வுகளுடன் வெளியே செல்ல ஆரம்பித்தனர்.முதலில் விதிமுறைகளை கடைபற்றி வாழ்வாதாரத்தை தொடங்கியவர்கள் நாளடைவில் கொரோனா தொற்றை மறந்து வாழ ஆரம்பித்துவிட்டனர்.

தற்போது மீண்டும் மின்னல் வேகத்தில் கொரோனா தொற்றானது பரவி வருகிறது.இப்போதைய தொற்றானது 2 வது,3 வது அலை என உருமாறி பரவி வருகிறது.அதிலும் குறிப்பாக இந்தியாவில் தமிழ்நாடு,கேரளா,மகராஷ்டிரா என அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்று அதிகமாக காணப்படுகிறது.இந்த கொரோனா பரவல் காரணமாக மீண்டும் பள்ளி,கல்லூரிகள் மூடப்பட்டது.இந்த கொரோனா தொற்றானது தஞ்சாவூரிலுள்ள மாணவர்களை குறிவைத்து தாக்கியது.அவ்வாறு தாக்கியதில் 16 பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் உட்பட 250 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

அதனைத்தொடர்ந்து சென்னை கிண்டி மத்திய தொழிற் பயிற்சி மையத்தில் 54 பேருக்கு மேலாக கொரோனா தொற்று உறுதியானது.இதனால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மேலும் 300 படுக்கைகள் அதிகரிக்க முடிவு செய்திருப்பதாக தமிழக் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியது,கொரோனா தொற்று உறுதியானவர்கள் நேரடியாக மருத்துவமனையில் வந்து சேர்ந்துக்கொள்வதால் அவர்களுக்கு எந்த அளவு பாதிப்பு உள்ளது என தரம் பிரிப்பதில் மிகவும் சிரமமாக உள்ளது.மேலும் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 300 படுக்கைகள் அதிகபடுத்த முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தும் கொரோனா தொற்று பரவுவது குறையவில்லை என்றார்.கொரோனா தொற்று குறையாததற்கு காரணம் மதம்,கலாச்சாரம்,அரசியல் கூட்டங்கள் என கலந்துக்கொள்ளும் மக்கள் விதிமுறைகளை கடைப்பிடிப்பதில்லை என்று கூறினார்.இந்த கூட்டங்களினால் கொரோனா தொற்றானது அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது என்றார்.