கடத்தப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய கொடிய பாம்பின் விஷத்தை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தததுடன் 6 பேரை கைது செய்தனர்.
ஒடிசா மாநிலத்தில் உள்ள புபனேஸ்வர் பகுதியில் உள்ள காட்டில் கொடிய பாம்பின் விஷம் கடத்துவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட வனத்துறை அதிகாரிகள் கடத்தப்பட்ட ஒரு லிட்டர் பாம்பு விஷத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பேசிய வனத்துறை அதிகாரி அசோக் மிஷ்ரா, ப்ர்கா பகுதியில் ஐந்து பாட்டில்களில் நிரப்பட்ட ஒரு லிட்டர் பாம்பு விஷத்தை பறிமுதல் செய்துள்ளதாகவும், இந்த பாம்பு விஷத்தை ரூ.10 லட்சத்திற்கு விற்பனை செய்ய ஒரு பெண் உட்பட 3 பேர் ஒப்பந்தம் மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.
ஆனால் சர்வதேச சந்தையில் பறிமுதல் செய்யப்பட்ட பாம்பு விஷத்திற்கு ஒரு கோடி ரூபாய் வரை மதிப்புள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஒரு லிட்டர் பாம்பு விஷத்தை 200 ராஜநாகத்திடம் இருந்து எடுத்திருக்க வேண்டும் எனவும் வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கொடிய பாம்பு விஷத்தை கடத்தியதாக ஒரு பெண் உட்பா 6 பேரை கைது செயத அதிகாரிகள் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.