உஷார்..! செல்போன் சார்ஜர் வெடித்து சிதறியதில் முகம் கிழிந்து சிறுவன் பலி..!

Photo of author

By CineDesk

செல்போன் சார்ஜர் வெடித்து சிதறியதில் முகம் கிழிந்து 12 வயது சிறுவன் உயிரிழந்த பரிதாபம் உத்திரபிரத்தேசத்தில் நடந்துள்ளது.

இன்று நாம் அனைவரும் செல்போனுடன் வாழ பழகிக் கொண்டுள்ளோம். காலையில் எழுந்ததில் இருந்து இரவு படுக்கும் வரை செல்போனுடனே சிலர் பொழுதை கழித்து வருகின்றனர். விளையாட்டு, வீடியோ பார்ப்பது, தொழில் நிமித்தமாக பயன்படுத்துவது என அனைவரும் செல் போனுக்கு அடிமைகளாகி உள்ளோம். சிலர் செல்போனில் பேட்டரி இல்லையென்ற போதிலும் சார்ஜ் செய்து கொண்டே பேசுவர். அப்பொழுது செல்போன் வெடித்தோ அல்லது சார்ஜர் வெடித்தோ சில அசம்பாவிதங்கள் நிகழ்ந்து அதிர்ச்சி அளித்தன.

அப்படி ஒரு சம்பவம் தான் உத்திரப் பிரதேசத்திலும் நடந்துள்ளது. அங்குள்ள மிர்சாபூர் என்ற மாவட்டத்தில் உள்ள 12 வயது சிறுவனான மோனு செல்போன் சார்ஜர் வெடித்து சிதறியதில் உயிரிழந்தான். ஆறாவது வகுப்பு படிக்கும் மோனு ஜடூ(jadoo) என்ற சார்ஜர் மூலம் சார்ஜ் செய்தால் எவ்வளவு நேரத்திற்கு மொபைலில் பேட்டரி பவர் இருக்கும் என்பதை பரிசோதிக்க எண்ணி ஜடூ சார்ஜரில் தனது செல்போன் பேட்டரிக்கு சார்ஜ் செய்துள்ளான். ஒரு மணி நேரம் கடந்த பின்பு பேட்டரி பவர் குறித்து பார்ப்பதற்காக ஜடூ சார்ஜரை அந்த சிறுவன் தொட்டுள்ளான்.

அப்பொழுது சார்ஜ் ஏறிக் கொண்டிருந்த செல்போன் பேட்டரி திடீரென வெடித்து சிதறியதில் சிறுவனின் முகம் கிழிந்தது. சத்தம் கேட்டு சிறுவனின் அறைக்கு வந்த உறவினர்கள் பார்த்தபொழுது மய்ய நிலையில் முகம் முழுவதிலும் ரத்தம் உறைய சிறுவன் கிடந்துள்ளான். உடனடியாக அவனை அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிறுவனை தூக்கி செல்ல அவன் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் மோனுவின் உடலை உறவினர்கள் தகனம் செய்ததாக கூறப்படுகிறது.

இதேபோன்று ஒருசம்பவம் 2019ல் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது. ஒருவர் தனது செல்போனை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு தூங்கி கொண்டிருந்த போது அது வெடித்து சிதறியதில் அந்த நபர் உயிரிழந்தார்.