முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களை பல்வேறு இடங்களில் பல்வேறு சமயங்களில் நேரடி விவாதத்திற்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். ஆனால் பல உப்பு சப்பற்ற காரணத்தைத் தெரிவித்து அதனை மறுத்து வந்தார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்.எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவருடைய அமைச்சரவை சகாக்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களை செல்லும் இடமெல்லாம் அதனை முன்வைத்து வந்தார்.
இதனை எடுத்து நல்ல எடப்பாடி பழனிச்சாமி எங்கள் மீது ஸ்டாலின் சுமத்தும் குற்றத்திற்கு ஆதாரம் இருக்கிறதா இருந்தால் என்னுடன் நேரடி விவாதத்திற்கு வர சொல்லுங்கள். எந்த துறையில் எந்த தொகுதியில் நாங்கள் செய்திருக்கிறோம் என்பதை சுட்டிக் காட்டும் அதே சமயம் அவருக்கு நாங்கள் விளக்கம் அளிக்க தயார் ஆனால் அவர் என்னுடன் விவாதம் செய்ய தயாரா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.அதேநேரம் இதனையும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பல உப்புச்சப்பற்ற காரணங்களை தெரிவித்து அதனை மறுத்து வந்தார்.
இந்த நிலையில், முதலமைச்சர் மீதும் மற்றும் அமைச்சர்கள் மீதும் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு பதில் தெரிவிக்கும் வகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்த சமயத்தில் எந்தவிதமான துண்டு சீட்டுகளை வைத்து கொள்ளாமல் தனியாக மக்கள் மத்தியில் மேடையில் அமர்ந்து தனி விவாதத்திற்கு வர வேண்டும் என்று சவால் விடுத்து இருக்கிறார். இதற்கு மறுப்பு தெரிவித்து எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தாங்கள் போட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று ஒரு உப்பு சப்பற்ற காரணத்தை தெரிவித்து வந்தார்.
இதனை அடுத்து இந்தியா டுடே நடத்திய கருத்தரங்கு ஒன்றில் பங்கு பெற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஸ்டாலின் எந்தவித துண்டு சீட்டும் இல்லாமல் தனியாக வந்தால் பதில் தெரிவிக்க தயார் என்று தெரிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.இதற்கும் ஏதோ ஒரு காரணத்தை தெரிவித்து தப்பித்துக் கொண்டார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். இதையெல்லாம் நோட்டமிட்டுக் கொண்டிருந்த சமூக வலைதள வாசிகள் பயந்து ஓடும் ஸ்டாலின் துண்டு ஸ்டாலின் என்று சமூக வலைதளங்களில் வறுத்து எடுத்து விட்டார்கள்.
இந்த நிலையில், தன்னுடைய நான்காவது கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்ற சமயத்தில் மீண்டும் ஸ்டாலினை விவாதத்திற்கு அழைத்திருக்கிறார் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் துண்டு சீட்டு இல்லாமல் தனியாக விவாதத்திற்கு வர தயாரா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.