இங்கே வெற்றி வாய்ப்பு இவருக்குத்தான்! விசிகவால் நிம்மதி இழந்த திமுக!

0
105

எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணி தான் வெற்றி பெறும் என்று தமிழகத்திலேயே அநேக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
அந்த விதத்தில் தான் அந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கையும் இருந்துவருகிறது. இன்னும் சொல்லப்போனால் அதிமுக சார்பாக கொடுக்கப்பட்டிருக்கும் தேர்தல்அறிக்கை அந்த கட்சியின் வெற்றிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் திமுக கூட்டணியில் வன்னியர் இனத்து மக்களையும் இந்து மத மக்களையும் ஒதுக்கி வைக்கும் விதமாக ஒரு சில வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமானவை கலப்பு திருமணத்தை ஆதரிக்கும் விதமாக கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு 60 ஆயிரம் நிதி உதவி அதோடு இந்து கோவில்களை இடித்துவிட்டு அந்த நிலங்களை ஏழை எளிய மக்களுக்கு வழங்குவது போன்ற வாக்குறுதிகளை அந்த கூட்டணியில் கொடுத்திருக்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் இந்து மத மக்களுக்கும் வன்னியர் இன மக்களுக்கும் எதிரானவர்கள் என்பதை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

அந்த விதத்தில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி 6 தொகுதியில் போட்டியிடுகிறது அந்த கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் அந்த ஆறு தொகுதிகளை தவிர்த்து பானை சின்னம் மற்ற தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் குன்னம் சட்டசபை தொகுதிகள் திமுக கூட்டணியில் திமுக சார்பாக எஸ் எஸ் சிவசங்கர் களம் காண்கிறார் அதேபோல அதிமுக சார்பாக தற்போதைய சட்டசபை உறுப்பினர் ஆர் டி ராமச்சந்திரன் களமிறங்குகிறார் இதில் பிரச்சனை என்னவென்றால் குன்னம் தொகுதியில் இருக்கக்கூடிய பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்கள் இன் வாக்கு திமுகவிற்கு செல்வதற்கு பதிலாக பானை சின்னம் சுயேச்சை வேட்பாளர்களுக்கு கொடுத்திருப்பதால் அந்த பணத்திற்கு சென்றுவிடும் என்பது இப்பொழுது அதிமுகவும் திமுகவுக்கும் கூட்டணி கட்சிகளுக்குமான கவலையாக இருந்து வருகிறது.

அதே சமயத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் குன்னம் சட்டசபைத் தொகுதியில் திமுகவைச் சார்ந்த ஆர் டி இராமச்சந்திரன் வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினராக இருந்து வருகிறார்.அதோடு மட்டுமல்லாமல் அவர் அந்த தொகுதி சார்ந்த மக்களுக்கு அனேக திட்டங்களையும் கொண்டு சேர்த்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இதனால் அவருடைய வெற்றி வாய்ப்பு அந்த தொகுதியில் மிகப் பிரகாசமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அதோடு வன்னியர் இன மக்களும் அவரை பெருவாரியான அளவில் ஆதரிக்க தொடங்கியிருப்பதால் நிச்சயமாக அவர் மீண்டும் வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினராக வாகை சூட இருக்கிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

அவரை எதிர் கொள்வதற்காகவே வன்னியர் என்ற ஆயுதத்தை எதிர்கட்சியான திமுக கையில் எடுத்திருக்கிறது. ஒருபுறம் வன்னியர்களை ஓரங்கட்டும் வகையில் பல வேலைகளை செய்து வரும் நிலையிலும் வாக்கு வங்கிக்காக வன்னியர் இனத்தைச் சார்ந்த சிவசங்கர் அவர்களை மீண்டும் இந்த தொகுதியில் களம் இறங்கி இருக்கிறது திமுக.

ஆனால் சமீபத்தில் வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டதன் காரணமாக, தமிழகம் முழுவதிலும் இருக்கக்கூடிய வன்னியர் இன மக்கள் எல்லோரும் அதிமுகவை வெகுவாக ஆதரித்து வருகிறார்கள். இருந்தாலும் வன்னியர் என்ற அடிப்படையில் பார்க்க கேட்டால் நிச்சயமாக வன்னியர்களின் ஓட்டுக்களை நான் வாங்கிவிடலாம் என்று கணக்குப் போட்ட அதிமுக தலைமை வன்னியர் இனத்தைச் சார்ந்த சிவசங்கரை மீண்டும் களமிறக்கி இருக்கிறது.

ஆனால் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்கும் வரையில் வன்னியர்களின் ஓட்டுகள் அந்த கட்சிக்கு செல்வது மிக மிக கடினம் ஆனால் இதனை திமுக உணர்ந்தது போல் தெரியவில்லை. அதனால் நிச்சயமாக எதிர் வரும் சட்டசபை தேர்தலில் குன்னம் தொகுதியில் ஆளும் அதிமுக சார்பாக போட்டியிடும் ஆர் டி ராமச்சந்திரன் அவர்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

Previous article1000  ரூபாய் 1500 ரூபாய் தரம்முண்ணு சொல்லரதை நம்பாதீங்க!! கஜானாவை சுரண்டும் ஆட்சி!! டிடிவி தினகரனின் அதிரடி பேச்சு!!
Next articleவிஜய் தொலைக்காட்சியின் விருது வழங்கும் விழா 2021 கோலாகலமாக ஆரம்பம் ஆனது!!