தொப்பையை குறைக்க எளிய வழி!! இப்படி செஞ்சி பாருங்க எடை குறைவதை கண்கூடாக பார்க்கலாம்!!

Photo of author

By CineDesk

தொப்பையை குறைக்க எளிய வழி!! இப்படி செஞ்சி பாருங்க எடை குறைவதை கண்கூடாக பார்க்கலாம்!!

இந்த பரபரப்பான காலங்களில் அனைவருக்கும் அரோகியம் மீதான கவனம் போய்விட்டது. இந்த கம்ப்யூட்டர் காலங்களில் ஐடி யில் வேலை பார்ப்பவர்களுக்கு மட்டும் அல்லாமல் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கூட எடை அதிகரிக்கும் பிரச்சினை உள்ளது. தொப்பை போட முக்கியமான காரணம் இரவு நேரகளில்  கண் விழிப்பது மற்றும் உண்ட உணவு செரிப்பதற்கு முன்பு மீண்டும் உண்பது.

இவை இரண்டு பழக்கங்களையும் மாற்றிக் கொண்டாலே பாதி பிரச்சினை தீர்ந்து விடும். உடல் எடை அதிகரிக்க பெரும் பங்காற்றுகிறது துரித உணவுகள். பாஸ்ட் புட் உணவுகள் மிகவும் ஆபத்தானவை இதை அடியோடு அகற்றினால் தான் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. உடல் எடையை குறைக்கவும் தொப்பை போடுவதை தவிர்க்கவும் சில எளிமையான குறிப்புகளை பார்க்கலாம் வாங்க.

நாட்டு முட்டை:

உடல் எடையை குறைக்க நாட்டு  முட்டை மிகவும் உதவும். நாட்டு முட்டையில் புரதம் கொழுப்பு கனிம சத்துக்கள் அத்தியாவசிய விட்டமின்கள் உள்ளதால் இது உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும்.

பாசி பருப்பு:

பாசி பருப்பில் உள்ள புரதம் கொழுப்பை கரைக்கவும் தொப்பை போடாமல் பார்த்துக்கொள்ளவும் உதவுகிறது. எனவே முடிந்த வரை தினமும் பாசி பருப்பை சேர்த்துக்கொள்ளுங்கள்.

பீன்ஸ்:

பீன்ஸில் உள்ள நார்ச்சத்துக்கள் காரணமாக தொப்பை போடமலும் மலச்சிக்கல் பிரச்சினையையும் சரி செய்கிறது. இவற்றை அன்றாட வாழ்வில் சேர்த்து வந்தால் தொப்பை பிரச்சனை காணாமல் போகும்.