தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா!!
இந்த அவசர காலத்தில் மனிதர்கள் அவர்களின் உடல் நலனில் அக்கறை காட்டுவது குறைந்துகொண்டே வருகிறது. இந்த கால நவீன வேலைகளின் காரணமாக உடல் உழைப்பும் குறைந்து புதிய புதிய நோய்களும் உருவெடுக்க தொடங்கி உள்ளது. இதற்கிடையில் நம் உடல் ஆரோக்கியத்தில் சிறிதளாவது அக்கறை காட்டுவது அவசியம். இதற்காக நாம் பெரிதும் கஷ்டப்பட தேவையில்லை. சிறு சிறு வாழ்வியல் மாற்றம் மட்டும் போதும். எடுத்துக்காட்டாக தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது உடலுக்கு எவ்வளவு நன்மை என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?
இந்த சிறு பழக்கம் உடலுக்கு எத்தனை எத்தனை நன்மைகளை தரும் என்பதை பார்ப்போம்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால்
குடல் சுத்தம் ஆகும். குடலில் தேங்கியுள்ள கழிவுகள் முழுமையாக வெளியேறும்.
மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.
தண்ணீர் குடிப்பதால் சிறுநீரகத்தின் வழியாக உடலில் உள்ள கிருமிகள் வெளியேறி சருமம் மிகவும் அழகாக பளபளப்பாக மாறும்.
வாய் துருநற்றம், பல் பிரச்சினைகள் குணமாகும்.
தலைவழியல் அவதி படுபவர்களும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிதால் தலைவலி குணமாகும்.
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து உடலின் ஆற்றல் அதிகரிக்கும்.
வளர்சிதை மாற்ற விகிதம் சுமார் 25 சதவிகிதம் அதிகரிக்கிறது.இதனால் அஜீரண பிரச்சினைகள் குறையும்.
உடல் எடையை குறைக்க உவுகிறது.
இளமை கூடும். சரும பிரச்சனைகளுக்கள் குறையும்.
சிறுநீரக கல், சிறுநீரகப்பை தொற்று, அல்சர் போன்ற பிரச்சினைகள் தடுக்கிறது.
நோய் எதர்ப்புசக்தியை அதிகரிக்கிறது.
கருவுற்ற தாய்மார்களுக்கு உடலில் அரோகியம் அகிதரிக்கும்.
எனவே அனைவரும் தினமும் காலையில் ஒரு டம்ளர் தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்தால் ஆரோக்கியமும் அழகும் மேம்பாடும்.