வாக்குச்சாவடிகளில் தில்லுமுல்லு செய்பவர்களுக்கு லாக்கப் தான்! மக்களே உஷார்!
தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலானது ஏப்ரல் மாதம் 6 தேதி நடக்கயிருக்கிறது. இரு கட்சிகளும் தன் கூட்டணி கட்சிகளுடன் வாக்கு சேகரிப்பதில் ஆர்வமாக உள்ளனர்.இந்நிலையில் மக்களின் வாக்குகள் கவர பல நூதன முறைகளை அரசியல்வாதிகள் கைப்பற்றி வருகின்றனர்.அதனையடுத்து ஆளுங்கட்சியும் எதிர் கட்சியும் மூத்த தலைவர்கள் இன்றி போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.அந்தவகையில் இவர்களுடன் கூட்டணி வைக்காமல் சில நடுநிலை கட்சிகளும் தேர்தலில் களமிறங்கியுள்ளது.
தமிழகத்தில் ஆட்சியை யார் கைபற்றப்போவது என்னும் பெரிய குளறுபடியே நடக்கிறது.இந்நிலையில் தேர்தலின் போது சில வாக்கு சாவடிகளில் தில்லுமுல்லு நடக்கும்.அதை கண்காணிப்பு செய்ய போலீசார் இருந்தும் மூன்றாவது கண்ணாக வெப் கேமராவை பொருத்துகின்றனர்.இந்த கேமராவை மிகவும் பதற்றமாக காணப்படும் இடங்களில் மட்டும் பொறுத்த உள்ளதாக கூறியுள்ளனர்.
கடந்த தேர்தலின் போதே நிகழந்த சர்ச்சைகளால் நக்சல்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடங்களில் மட்டும் கண்காணிப்பு கேமராவை பொறுத்த போவதாக கூறியுள்ளனர்.அந்தவகையில் சேலம்,நாமக்கல்,தர்மபுரி,கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய சேலத்தில் மொத்தம் 10,227 வாக்குச்சாவடிகள் உள்ளன.இவற்றில் மொத்தம் 1,149 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.
பதற்றமாக உள்ள வாக்குச்சாவடிகளில் மட்டும் வெப் கேமரா பொருத்தபோவதாக தெரிவித்துள்ளனர்.அதுமட்டுமின்றி உள்ளூர் காவல்துறையினர்,துணை ராணுவத்தினர் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்துவதாக உள்ளது.இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கூறுகையில்,சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்றத் தொகுதிகளில் 223 வாக்குச்சாவடிகளும்,நாமக்கல் மாவட்டத்தில் 240 ,தருமபுரி மாவட்டத்தில் 400, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 286 என மொத்தமாக 1,149 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
அதனால் இந்த வாக்குச்சாவடிகளில் மட்டும் வெப் கேமரா பொருத்துவதில் தீவிரமான பணிகள் நடைபெற்று வருகிறது.வெப் கேமரா செயல்பாடுகள் குறித்த ஒத்திகை ஏப்ரல் 3 தேதி மற்றும் இறுதி ஒத்திகையானது ஏப்ரல் 6 ஆம் தேதி நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.அதனால் வாக்காளர்கள் பயமின்றி வாக்களிக்கலாம் அதற்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளனர்.