எச் ராஜா செய்த காரியத்தால் குழப்பத்தில் ஆழ்ந்த வாக்காளர்கள்!

0
93

விரைவில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. அதோடு தமிழகம் முழுவதிலும் பிரச்சார களமும். விறுவிறுப்பு அடைந்து இருக்கிறது.இதனைத் தொடர்ந்து ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்று மட்டும் இல்லாமல் மற்ற சிறிய கட்சிகளும் எப்படியாவது இந்த முறை ஒரு தொகுதியையாவது கைப்பற்றி விடவேண்டும் என்று மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.

ஆனால் அவர்களுடைய செயல்பாடு கைகொடுக்குமா என்பதை உறுதிபட தெரிவிக்க முடியவில்லை.இந்த நிலையில், பாஜகவை சார்ந்த எச் ராஜா இதற்கு முன்னரே சட்டசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தாலும் இந்த முறை எப்படியாவது சட்டசபை உறுப்பினர் ஆகி விடவேண்டும் என்று மிகக் கடுமையாக முயற்சி செய்து வருகிறார்.

அவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டசபை தொகுதியில் அதிமுக கூட்டணியின் சார்பாக பாஜகவில் களமிறங்குகிறார்.பிரச்சாரம் தொடங்கியதிலிருந்து தன்னுடைய பிரச்சார வாகனத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்திற்கு பதிலாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை ஒட்டிக்கொண்டு வாக்கு கேட்டார். ஆனால் அவர் வாக்கு கேட்ட சின்னம் தாமரை தான் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் பாஜகவை பொறுத்தவரையில் தமிழகத்தில் பெரிய அளவிற்கு வரவேற்பு இல்லை என்று சொல்லப்படுவது. ராஜா காரைக்குடி தொகுதிக்கு என்று தயார் செய்யப்பட்ட தேர்தல் அறிக்கையை விளம்பரப் பக்கத்தில் தான் ஒரு பாஜகவின் வேட்பாளர் என்பதை தெரிவிக்காமல் தன் கட்சி பெயரையும் வெளிப்படுத்தாமல் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

பாஜக வேட்பாளர் என்று தெரிவித்து வாக்கு கேட்டால் பொதுமக்களிடம் போதிய வரவேற்பு இருக்காது என்று அவர் கருதியதால் அதிமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர் எனவும், இலையில் மலர்ந்த தாமரை சின்னத்திற்கு வாக்களியுங்கள் எனவும், அவர் பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார். இதனால் அவர் கட்சியை சார்ந்தவர்கள் மாபெரும் குழப்பத்திற்கு உள்ளாகி இருப்பதாக தெரிகிறது. இது போதாது என்று அவர் ஒரு சில குளறுபடிகள் செய்திருப்பதால் வாக்காளர்கள் குழம்பிப் போயிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

தமிழகத்திலே காரைக்குடியில் இதற்கு முன்னரே செயல்பட்டுக் கொண்டிருக்கும் அம்ருத் திட்டத்தை மறுபடியும் அமல்படுத்துவோம் என்று தெரிவித்திருக்கிறார். அதோடு காரைக்குடியில் சிப்காட் தொழில் நிறுவனமே இல்லாத நிலையில், சிப்காட் தொழில் நிறுவனம் புராணமைக்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறார்.
செட்டிநாடு கண்டாங்கி சேலைக்கு கடந்த 2019ஆம் ஆண்டு புவிசார் குறியீடு மத்திய அரசு சார்பாக வழங்கப்பட்டு இருக்கின்ற நிலையில், மறுபடியும் நான் செட்டிநாடு கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு பெற்றுத்தருவேன் என்று தெரிவித்திருப்பது பொது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.