பிரச்சார களத்தை ஆபாசமாக மாற்றிய திமுக!

0
130

கடந்த பத்து வருட காலமாக ஆட்சி இல்லாத திமுக இந்த முறை எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறது. அந்தக் கட்சி அவ்வாறு செயல்படுவது தவறல்ல ஆனால் அந்த கட்சி செயல்படும் விதம் தான் தவறு என்று பேச்சுகள் எழுந்து வருகின்றன தமிழகம் முழுவதும்.கடந்த பத்தாண்டுகளில் அதிமுக பல தவறுகளை செய்து இருக்கும் அதனை சுட்டிக்காட்டி எப்படியேனும் நாம் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று எண்ணிய திமுக தலைமை பல குற்றச்சாட்டுகளை தமிழக மக்களிடம் முன்வைத்து வந்தது ஆனால் இது எதுவுமே மக்களிடம் எடுபடாத காரணத்தால் வெறுத்துப் போய் இருக்கிறது எதிர்கட்சியான திமுக.

அந்த வெறுப்பின் வெளிப்பாடாகவே சமீபகாலமாக அந்த கட்சியின் பிரச்சாரம் செய்யும் தலைவர்களின் பேச்சுகள் அமைந்திருக்கிறது எங்கு சென்றாலும் ஆபாசம் எதிலும் ஆபாசம் என்று போய்க்கொண்டிருக்கிறது அந்த கட்சியின் பிரச்சாரம்.முதல்வரையும் முதல்வரின் தாயாரையும் தரம் கெட்ட வார்த்தைகளில் விமர்சனம் செய்த திமுகவைச் சார்ந்த இராசா அவர்களை தமிழகம் முழுவதிலும் எல்லோரும் கண்டிக்க தொடங்கினார்கள். ஆனால் அதை அவர் பெரிதாக எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை.

அதேபோல நேற்று கன்னியாகுமரியில் பிரச்சாரம் செய்த ஸ்டாலின் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களை பொய் ராதாகிருஷ்ணன் என்று தெரிவிக்க கூட்டத்தில் இருந்தவர்கள் பொரி உருண்டை ராதாகிருஷ்ணன் என்று தெரிவிக்க அங்கே சர்ச்சை உண்டானது.இதனைத் தொடர்ந்து தயாநிதி மாறன் பங்கேற்ற ஒரு பிரச்சார கூட்டத்தில் ஜெயலலிதா மம்மி மோடி டாடி என்றால் அவர்களுக்குள் இருக்கும் உறவு என்ன என்று கேட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.

அதேபோல இன்று உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி என்றால் முதல்வர் நிற்பார் உட்காரு என்றால் உட்காருவார் முட்டி போடு என்றால் முட்டி போடுவார் என்று தெரிவிக்க அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் முதல்வரை மிகக் கீழ்த்தரமாக விமர்சனம் செய்திருக்கிறார். இதனை கண்டிக்கும் விதமாக முதல்வரை இப்படியா பேசுவது என்று தெரிவித்து இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

ஆளுங்கட்சியின் மீது குறை சொல்ல முடியாத திமுக இப்படி செல்லுமிடமெல்லாம் அந்த கட்சி தொடர்பாகவும் அந்த கட்சியில் இருக்கும் தலைவர்கள் தொடர்பாகவும் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்பாகவும் பல அவதூறு கருத்துக்களை தெரிவித்து அவர்களை அவமானப்படுத்தும் விதமாகவே நடந்து வருகின்றன.இதனால் தமிழக மக்கள் அனைவரும் திமுக மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.ஒருவேளை இந்தமுறையும் திமுக வெற்றி பெறவில்லை என்றால் அவர்களுடைய உண்மை முகத்தை இப்பொழுது அரசியல் கட்சிகள் தான் பார்த்து வருகின்றனர். ஆனால் எதிர்காலத்தில் ஒட்டு மொத்த தமிழகமும் பார்ப்பதற்கு உண்டான சூழ்நிலை ஏற்படலாம் என்று தெரிவிக்கிறார்கள்.

ஆனால் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே பெண்கள் தொடர்பாகவும் முக்கிய அரசியல் கட்சிகள் தொடர்பாகவும் இப்படி அவதூராக பேசும் திமுகவை சேர்ந்தவர்கள் அதிகாரத்திற்கு வந்தால் தமிழகத்தில் இருக்கக்கூடிய பெண்களின் நிலை என்ன என்று யோசித்துப் பார்த்தால் திமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என்று சொல்கிறார்கள்.என்னதான் பத்து வருட காலமாக ஆட்சியில் இல்லாவிட்டாலும் இந்த அளவிற்கு வெறுப்பு தட்டிப் போய் இவ்வளவு கீழ்த்தரமாக இறங்கி விமர்சனம் செய்வதெல்லாம் மிகவும் அநியாயம் என்று தமிழகம் முழுவதும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.இதையெல்லாம் கவனித்த தமிழக மக்கள் திமுகவை சேர்ந்தவர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வருவதற்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்று பேசிக்கொள்கிறார்கள்.

Previous articleகூட்டணி கட்சிக்கே வேட்டு வைத்த துரைமுருகன்!
Next articleபழசை கிளறிய ஜெயக்குமார்! பரிதவிப்பில் திமுக தலைமை!