பழசை கிளறிய ஜெயக்குமார்! பரிதவிப்பில் திமுக தலைமை!

0
106

விரைவில் தேர்தல் வரவிருப்பதால் தமிழகத்தில் அமைச்சர்கள், முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் என்று முக்கிய நபர்கள் எல்லோரும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கிவருகிறார்கள்.அந்த விதத்தில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தன்னுடைய சொந்த தொகுதியான ராயபுரம் தொகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்பொழுது பெண்கள் தொடர்பாக சர்ச்சை பேச்சுகள் திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும் அதேபோல பெண்கள் தொடர்பாக சர்ச்சை பேச்சு பேசிய ராதாரவி மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த திமுக தலைமை இப்போது ராசா மீது நடவடிக்கை எடுப்பதற்கு மட்டும் தயங்குவது ஏன் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

திமுகவைப் பொறுத்தவரையில் பெண்கள் தொடர்பான நிலைப்பாடு என்று எடுத்துக் கொண்டால் அவர்கள் அனேக சமயங்களில் அனேக இடங்களில் பெண்கள் தொடர்பாக ஆபாசமாக பேசியதுதான் அதிகம். அதோடு திமுக மட்டுமல்ல அந்த கட்சியில் இருக்கக்கூடிய கூட்டணி கட்சிகளும் கூட பெண்கள் தொடர்பாக விரிவாக தான் பேசி வருகிறது அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தான் சாட்சி.

இந்து பெண்களை பற்றி மிக அவதூறாக பேசி அவர்களை கொச்சைப்படுத்தியது திருமாவளவன் தான் அதேபோல தற்சமயம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்பாகவும் அவருடைய தாயார் தொடர்பாகவும் மிகவும் சர்ச்சைக்குரிய கேவலமான ஒரு கருத்தை தெரிவித்து இருப்பதும் திமுகவைச் சார்ந்த ராசாதான் அந்த விதத்தில் கடந்த 1989 ஆம் வருடம் ஜெயலலிதாவை நிறைந்த அவையில் கொச்சைப்படுத்தியதும் இதே திமுக தான்.

அதில் முக்கிய பங்கு வகித்தவர் தற்போது திமுகவின் பொதுச்செயலாளராக இருந்து வரும் துரைமுருகன் தான் என்ற கருத்தும் இருந்து வருகிறது.இப்படியெல்லாம் பெண்கள் தொடர்பாக இழிவாகப் பேசுவதும் அவர்களை இழிவாக கருதுவதாக இருக்கும் திமுக தலைவர்கள் தேர்தல் என்று வந்துவிட்டால் மட்டும் பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சி திமுக ஆட்சி என்று தெரிவித்து வருவது எந்தவிதத்திலும் நம்பும்படியாக இல்லை என்ற கருத்தும் தமிழகம் முழுவதிலும் இருந்து வருகிறது.தற்போது இருக்கும் சூழ்நிலையை பார்த்தால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னால் பெண்களுக்காக குரல் கொடுக்கும் ஒரு ஆளுமை தமிழகத்தில் இல்லை என்றுதான் தோன்றுகிறது.

ஒருவேளை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தற்சமயம் உயிருடன் இருந்திருந்தால் திமுகவினரின் இதுபோன்ற பேச்சுக்கள் எல்லை மீறி போவது நடவாத காரியம் ஆனால் தற்சமயம் பெண்களுக்கான உரிமைகளை கேட்கவும் அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கவும் யாரும் இல்லை என்ற மிதப்பில் தான் திமுக இவ்வாறு பெண்களை மிக இழிவாக பேசி வருகிறது இதற்கெல்லாம் இதில் வரும் சட்டசபை தேர்தலில் திமுக பதில் சொல்லியே ஆகவேண்டும்.இன்னும் சொல்லப்போனால் திமுக என்பது தமிழ்நாட்டிலே பெண்களுக்கு ஒரு சதவீத அளவிற்கு கூட பாதுகாப்பற்ற ஒரு கட்சியாக மாறி போய்விட்டது.ஆகவே அந்த கட்சியில் இருக்கும் பெண்கள்கூட தற்சமயம் அந்த கட்சியை விட்டு வெளியேற தொடங்கியிருக்கிறார்கள் என்ற தகவலும் கிடைத்திருக்கிறது.