முதல்வருக்கு எதிராக ஒன்றுசேர்ந்த எதிர்க்கட்சிகள்! சமாளிப்பாரா எடப்பாடி பழனிச்சாமி!

0
192

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் அதுவும் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு சில தினங்களே இருக்கும் காரணத்தால், தமிழகத்தில் மேலும் மேலும் பரபரப்பு அதிகமாகிக் கொண்டே போகிறது.ஆளுங்கட்சி எதிர்க்கட்சியை விமர்சனம் செய்வதும் எதிர்க்கட்சி ஆளுங்கட்சியை விமர்சனம் செய்வதும் என்று ஒருவருக்கொருவர் தொடர்ந்து குற்றம் கூறிக் கொண்டே செல்கிறார்கள்.

தமிழகத்திலே தற்பொழுது அதிமுக அரசைப் பொறுத்தவரையில் மக்களிடம் பெரிய அளவில் அதிருப்தி இல்லாத காரணத்தால், எப்படியும் இந்த முறை ஆட்சிக்கு வந்து விடலாம் என்று முழுமூச்சாக செயல்பட்டு வருகிறது அதிமுக தலைமை. ஆனால் இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்கட்சியான திமுக எப்படியாவது மக்களிடம் அந்த கட்சியின் பெயரை கெடுத்து விட வேண்டும் என்பதற்காகவே கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறது.ஏற்கனவே திமுக ஒருபுறம் ஆளும் கட்சிக்கு தலைவலியாக இருக்கிறது. இந்த நிலையில், டிடிவி தினகரன் மறுபுறம் அந்த கட்சியை பலவீனப்படுத்தும் வகையில் தான் தனித்து போட்டியிடுகிறார் என்று சொல்லப்படுகிறது.

தமிழகத்திலே அனேக பகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடுகிறது அங்கெல்லாம் அதிமுகவும் போட்டியிடுகிறது திமுகவும் போட்டியிடுகிறது ஆகவே அதிமுகவிற்கு செல்லக்கூடிய வாக்குகள் நிச்சயமாக இதில் பிரிவதற்கு வாய்ப்பிருக்கிறது. அப்படியானால் இந்த தேர்தலில் அனேக வாக்குகள் அதிமுகவிற்கு செல்லாமல் பிரிந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.அப்படி வாக்குகள் பிரிந்தால் அதிமுகவின் வெற்றியில் பாதிப்பு ஏற்படும் அந்த ஒரு காரணத்திற்காக தான் டிடிவி தினகரன் செயல்பட்டு வருகிறார் என்று சொல்கிறார்கள்.

மறுபுறமோ அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்கள் அதிமுக என்ற கட்சியின் மீது பொதுமக்களுக்கு பெரிய அளவில் வெறுப்பு இல்லை என்பதை தெரிந்து கொண்டு அவர்களுக்கு எதிராக வேறு விதமாக பிரச்சாரம் செய்ய தொடங்கி இருக்கிறார்கள். அதாவது நேரிடையாக அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டாம் என்று சொல்வதை விட பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டாம் என்கிற ரீதியில் அவர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

ஆக மொத்தத்தில் எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஆளும் கட்சியாக இருக்கும் அதிமுகவை பலவீனப்படுத்தி அந்த கட்சியை தோற்கடிப்பதற்கு வெவ்வேறு வழிகளில் முயற்சி செய்து வருகிறார்கள். அவர்களுடைய சூழ்ச்சியை எல்லாவற்றையும் தாண்டி அதிமுக வெற்றி பெறுமா மீண்டும் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி வருவாரா என்பதுதான் இந்த தேர்தலின் கிளைமேக்ஸாக இருக்கப்போகிறது.

எது எப்படியோ அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் இவர்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு தமிழக மக்களை தான் அடமானம் வைக்கப் போகிறார்கள். ஏனென்றால் அரசியல்வாதிகள் என்று வந்துவிட்டாலே பொதுமக்கள் எல்லோரும் தேர்தல் சமயத்தில் வெறும் பலியாடுகளாகவே இருந்து வருகிறார்கள். அவர்களை வைத்து ஆட்சிக்கு வந்துவிட்டு அதன் பிறகு அதை அதிமுக திமுக என யாராக இருந்தாலும் ஆட்சிக்கு வரும் வரையில் மக்களிடம் கும்பிட்டு ஓட்டு கேட்கும் அரசியல் கட்சியினர் தேர்தலுக்குப் பின் அந்த மக்களை சிறிதும் மதிப்பதும் இல்லை அவர்களுக்கு மதிப்பளிப்பது இல்லை இதுதான் தொன்று தொட்டு வழக்கமாக நடைபெற்று வருகிறது.

இதையெல்லாம் அறியாத பாமர மக்கள் வாக்கை மட்டும் செலுத்திவிட்டு அமைதியாக இருந்துவிடுகிறார்கள். ஆனால் வாக்குகளைப் பெற்று வெற்றி அடைந்தவர்கள் தாங்கள் உண்டு தங்கள் வேலை உண்டு என்று போய்விடுகிறார்கள்.ஆனால் மக்களை பொறுத்தவரையில் நாள்தோறும் நரக வாழ்க்கைதான் என்று கூறுகிறார்கள்.

இதற்கெல்லாம் காரணம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு இல்லாததுதான். ஆனால் இதனை தமிழக மக்கள் யாருமே புரிந்து கொள்வதில்லை அவர்களைப் பொறுத்தவரையில் அன்றாட பொருட்கள், அன்றாட உணவு உடை இருப்பிடம் போன்றவை கிடைத்தால் போதும் என்கிற ரீதியில் தான் கடந்த 50 ஆண்டு காலமாக ஆட்சியாளர்கள் தமிழக மக்களை வைத்து இருக்கிறார்கள்.

அரசியலைப் பொறுத்தவரையில் என்ன நடக்கிறது என்பதை பொதுமக்கள் கவனிக்கத் தொடங்கினாலே அரசியல்வாதிகளின் வக்கிரபுத்தி தானாக மங்கி விடும் ஆனால் அதனை பொதுமக்கள் செய்வதில்லை காரணம் அவர்களுக்கு பெரிய அளவில் விபரம் ஏதும் தெரியவில்லை என்பதுதான் உண்மை.தமிழக மக்கள் இன்னும் எத்தனை காலத்திற்கு இப்படியே இருப்பார்கள்? இந்த அரசியல்வாதிகளும் இன்னும் எத்தனை காலத்திற்கு இப்படி ஓட்டுக்களை வாங்கிக்கொண்டு பொதுமக்களை ஓரம் கட்டுவார்கள் என்று தெரியவில்லை.

Previous articleஎனக்கு இன்னொரு முகம் இருக்கு! தம்பி இது தமிழ்நாடு!
Next articleதமிழகம் ஊழலில் மட்டுமே வெற்றி நடைபோடுகிறது! கனிமொழி விளாசல்!