எனது சாவுக்கு போலீஸ் தான் காரணம்! போலீஸ் அதிகாரிகளையே கதிகலங்க வைத்த வாலிபர்!
இந்த காலகட்டத்தில் தற்போதைய வாலிபர்கள் பல முடிவுகளை சட்டென்று எடுத்துவிடுகின்றனர்.அந்தவகையில் தார்வார் மாவட்டம் திம்மாப்புரா கிராமத்தை சேர்ந்தவர் தான் மைலாரா,இவருக்கு வயது 25.இவருடைய லட்சியமே போலீஸ் துறையில் பணியாற்றுவது தான்.இந்த நிலையில் அவர் கர்நாடக உள்துறை அமைச்சர் மந்திரி பசவராஜ் பொம்மை,கர்நாடக அரசு,கர்நாடக போலீஸ் டி.ஜி.பி பிரவீன் சூட் ஆகியோருக்கு ஓர் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடித்ததில் அந்த வாலிபர் கூறியிருப்பது,நான் கர்நாடக போலீஸ் துறையில் பணியாற்ற விரும்பிகிறேன்.அத்துறையில் கான்ஸ்டபிள் தேர்வு இன்னும் நடத்தப்பட வில்லை.அதற்கு வயது வரம்பு 25.எனக்கு இன்னும் சிறிது மாதங்களில் 25 முடிய போகிறது.இதனால் தனது போலீஸ் ஆகும் கனவு,கனவாகவே ஆகிவிடுமோ என்று பயமாக உள்ளது.ஆகையால் கர்நாடக அரசு போலீஸ் பணிக்கான வயதை உயர்த்த வேண்டும்.இல்லையென்றால் உடனடியாக போலீஸ் காவலர் பணி நடக்க உத்தரவிட வேண்டும் என்று அந்த கடிதத்தில் கேட்டுள்ளார்.
இந்த கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் எனது சாவுக்கு நீங்கள் தான் காரணம் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.இவர் இவ்வாறு கடிதம் அனுப்பியது டிஜிபி மற்றும் உள்துறை அமைச்சர் இருவருக்கும் கதி கலங்கி விட்டது.சமீபத்தில் தான் கர்நாடக அரசு உதவி சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதுவோரின் வயது வரம்பை அதிகரித்தது என்பது குறிப்பிட தக்கது.இவ்வாறு,அவரின் மிரட்டல் கடிதம் அங்கு பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.