News

துணை முதல்வரை சந்தித்த முதல்வர்!

அதிமுகவின் ஒருங்கினைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பி.எஸின் மாமியார் வள்ளியம்மாள் இரண்டு நாட்களுக்கு முன் மரணமடைந்தார்.

இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டிருக்கின்ற இரங்கல் செய்தியில், ஓ பன்னீர்செல்வம் தாயாரை இழந்து வாடும் விஜயலட்சுமி பன்னீர்செல்வம் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய சார்பாகவும், கழகத்தின் உடன்பிறப்புகள் சார்பாகவும், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் அவருடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர் செல்வத்தின் வீட்டிற்கு நேரடியாக சென்று மறைந்த வள்ளியம்மாள் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தியிருக்கிறார். அந்த சமயத்தில் துணை முதல்வர்,அமைச்சர்கள் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.

Leave a Comment